சித்தராமையா ஆட்சி 10 மாதம்தான்..டிகே சிவகுமார்தான் கவிழ்க்கப் போகிறார்.. கொளுத்திப் போட்ட குமாரசாமி!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி 10 மாதங்களில் கவிழ்ந்துவிடும்; முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை வெளியிடச் செய்வதே துணை முதல்வர் டிகே சிவகுமார்தான்; சித்தராமையாவின் முதல்வர் பதவியை குறிவைத்துதான் டிகே சிவகுமார் அத்தனை நாடகத்தையும் நடத்தி வருகிறார் என்று மத்திய அமைச்சர் குமாரசாமி பேசியிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கியது பெரும் சர்ச்சையானது. சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளான பாஜக, ஜேடிஎஸ் வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கையை முன்வைத்து பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி பாஜக- ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்த பாதயாத்திரை முடிவில் ஆகஸ்ட் 10-ந் தேதி மைசூரில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பெங்களூரில் இருந்து நேற்று இந்த பாதயாத்திரையை மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் முரசறைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமி, சித்தராமையாவின் ஆட்சி 10 மாதங்கள்தான் நீடிக்கும். துணை முதல்வராக இருக்கும் டிகே சிவகுமார்தான் சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை பகிரங்கப்படுத்தி வருகிறார். முதல்வர் பதவியை இலக்கு வைத்தே டிகே சிவகுமார் இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்.
சித்தராமையாவின் முந்தைய ஆட்சிக் கால ஊழல்கள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருக்கிறதா? அரசியலுக்கு வருவதற்கு முன்னர் டிகே சிவகுமார் குடும்பத்தின் சொத்து மதிப்பு என்ன? தற்போதைய சொத்து மதிப்பு என்ன? என்பதை பகிரங்கப்படுத்த முடியுமா? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்காது என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பாதயாத்திரைக்கு ஜேடிஎஸ் கட்சி ஆதரவு தராது என பாஜகவை மிகக் கடுமையாகவே விமர்சித்திருந்தார் மத்திய அமைச்சர் குமாரசாமி. தங்களது குடும்பத்துக்கு எதிராக செயல்படும் பிரீத்தம் கவுடா தலைமையில் இந்த யாத்திரை நடைபெறுவதால் ஜேடிஎஸ் பங்கேற்காது எனவும் மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications