‛‛ராமர் பக்தர்கள் குரங்குகளோடு ஒப்பீடு’’.. காங்கிரஸ் தலைவரால் சர்ச்சை.. யார் இந்த சத்ய பிரகாஷ்?
பெங்களூர்: கடவுள் ராமரின் பக்தர்களை குரங்குகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சத்யபிரகாஷ் போட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது சர்ச்சையான நிலையில் அவர் தனது பதிவை பேஸ்புக்கில் இருந்து ‛டெலிட்' செய்தார். இருப்பினும் அவரது பதிவின் ‛ஸ்கிரீன்ஷாட்' என்பது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோவில் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், தூதரக அதிகாரிகள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளனர்.
ராமர் கோவில் பெயரில் பாஜக அரசியல் லாபம் தேடுகிறது. கோவில் பணிகள் முழுவதுமாக முடியாமல் அரசியலுக்காக அவசர கதியில் பாஜக கோவிலை திறக்கிறது. இதனால் விழாவில் பங்கேற்க போவது இல்லை என 3 பேர் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த பஞ்சாயத்தே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தான் கடவுள் ராமர் பக்தர்களை குரங்குகள் எனக்கூறும் வகையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சத்யபிரகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது சத்யபிரகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் விமானத்தில் குரங்குகள் காவி நிற உடை அணிந்து பயணிப்பது போன்ற போட்டோவை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில் அவர், ‛‛ராமர் பக்தர்கள் அயோத்திக்கு செல்கின்றனர்'' என கூறியிருந்தார்.
இதனை பார்த்த பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கோபமடைந்தனர். உடனடியாக கமெண்ட்டில் அவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சத்ய பிரகாஷ் தனது பேஸ்புக் பதிவை நீக்கம் செய்தார். இருப்பினும் அவரது பதிவு ஸ்கீரின்ஷாட்டுகளாக இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர். அதோடு காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிராக உள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications