காங்கிரசுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்கும்..ஆனால் ஆட்சியை பிடிப்பது பாஜக தானாமே! எப்படி? புது சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக சுவர்ணா நியூஸ் 2வது கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி அதிக ஓட்டு சதவீதத்தை பெற்றாலும் கூட பாஜக தான் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது சுவர்ணா நியூஸ் சார்பில் 2வது கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் மே 1ம் தேதி வரைசுமார் 30 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி மாநிலத்தில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக ஓட்டு சதவீதத்தை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜக தான் 113 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 38.5 சதவீதம் முதல் 41.5 சதவீதம் வரை ஓட்டுகள் பெறும். பாஜக 38 முதல் 40.5 ச சதவீதம் வரையும் ஜேடிஎஸ் கட்சி 14 முதல் 16.5 சதவீதம் வரையும் ஓட்டுகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட பாஜக தான் மெஜாரிட்டியை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 110 முதல் 114 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி கட்டாயம் எனும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி 89 முதல் 97 இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 26 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் 5 சீட் வரை வாகை சூடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஓட்டு சதவீதம் கிடைத்தாலும் கூட அதனை தொகுதி வாரியாக வெற்றியாக மாற்றும் சக்தி இல்லை. மாறாக பாஜகவுக்கு ஓட்டு சதவீதம் காங்கிரஸை விட குறைவாக இருந்தாலும் கூட தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என சுவர்ணா நியூஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்து கணிப்பால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் சிக்கலில் சிக்கி உள்ளனர்.
ஏனென்றால் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போதும் கூட பாஜகவின் ஓட்டு சதவீதம் வெறும் 36.5 சதவீதமாக தான் இருந்தது. மாறாக காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் 38 என்ற அளவில் இருந்தாலும் கூட இந்த கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications