விவசாயிகளுக்கு என்ன செஞ்சீங்க? காங்கிரஸ் அரசை விளாசிய சொந்த கட்சி எம்எல்ஏ! தற்கொலை மிரட்டல்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் அரசு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் விவசாயிகளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஒன்றுமே செய்யவில்லை.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறது. அதேபோல் பெலகாவி மாவட்டம் காக்வாட் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக பரமகவுா காகே என்ற ராஜூ காகே இருக்கிறார்.

இந்நிலையில் தான் ராஜூ காகே தற்போது ஆளும் சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அதுமட்டுமின்றி பெங்களூர் விதான சவுதாவில்(கர்நாடகா தலைமை செயலகம்) தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் மிரட்டல் விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அதாவது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜூ காகே நேற்று தனது சொந்த தொகுதியான காக்வாட்டில் உள்ள தாவஷி கிராமத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛கர்நாடகா அரசு விவசாயிகளுக்கு என்று எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதனை அரசு பரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களிடம் பொய் சொல்லி நடிக்க வேண்டுமா? அப்படி நான் பொய் சொன்னாலும் நாட்டில் நெல் உள்பட உணவு தானியங்கள் இல்லாவிட்டால் நாம் எதை சாப்பிடுவது?
பணத்தை நம்மால் சாப்பிட முடியுமா? முதலில் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். கடந்த ஓராண்டாக விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இது தொடர்ந்தால் விவசாயிகளுக்காக பெங்களூர் விதான சவுதாவி் நான் தற்கொலை செய்து உயிரை மாய்க்கவும் தயாராக இருக்கிறேன்.
விவசாயிகளுக்கு அரசால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை? விவசாயிகளுக்கு உதவி செய்ய முடியாவிட்டால் நாம் அதிகாரத்தில் இருந்து என்ன பயன்? ஆளும் கட்சியின் எம்எல்ஏவாக நான் என் இயலாமையை நினைத்து வருத்தப்படுகிறேன். எதிர்காலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.
ராஜூ காகே என்பவர் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். இவர் 2000, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் பாஜக சார்பில் காக்வாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் 2018 சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். பிறகு 2023 சட்டசபை தேர்தலில் காக்வாட் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 4வது முறையாக எம்எல்ஏவாகி உள்ள ராஜூ காகே அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அமைச்சர் பதவி என்பது அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே











Click it and Unblock the Notifications