பாஜகவுக்கு போனாலும் சம்பந்தி வீடாச்சே.. எஸ்.எம். கிருஷ்ணா காலில் விழுந்து வாழ்த்து பெற்ற டிகேஎஸ்!
பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான தமது உறவினரான எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்து காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்ற காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசில் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுள்ளார்.

துணை முதல்வர் டிகே சிவகுமார் உறவினர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்த வரிசையில் டிகே சிவகுமார் சந்தித்தது பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை.
கர்நாடகா மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் எஸ்.எம்.கிருஷ்ணா. 1962-ம் ஆண்டு சுயேட்சையாக, அப்போதைய பிரதமர் நேரு பிரசாரம் செய்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றவர். பின்னர் கர்நாடகா காங்கிரஸின் முகங்களில் முதன்மையானவராகவும் மாறினார். மத்திய அமைச்சராக பதவி வகித்தார். வீரப்ப மொய்லி கர்நாடகா முதல்வராக இருந்த போது துணை முதல்வராக இருந்தார் கிருஷ்ணா. பின்னர் 1999-2004ம் ஆண்டில் கர்நாடகா முதல்வராகவும் பதவி வகித்தார். மகாராஷ்டிரா ஆளுநராகவும் எஸ்.எம். கிருஷ்ணா பதவி வகித்தார். அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியலில் இறங்கினார். 2017-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவித்தார்.
இன்னொரு பக்கம் எஸ்.எம். கிருஷ்ணா, டி.கே.சிவகுமாரின் உறவினரும் கூட. டிகே சிவகுமாருக்கு ஐஸ்வர்யா, அபர்ணா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா திருமணம் செய்திருப்பது சித்தார்த்தா- மாளவிகா கிருஷ்ணன் தம்பதியரின் மகன் அமர்த்தியா. மாளவிகா கிருஷ்ணன் வேறு யாருமில்லை எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள். சித்தார்த்தா, தற்கொலை செய்து கொண்ட காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர். அதாவது எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் வழி பேரனைத்தான் டிகே சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்துள்ளார்.
ஆகையால் எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்தார் டிகே சிவகுமார். பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா காலில் விழுந்து 3 முறை தொட்டு வணங்கினார். டிகே சிவகுமாருக்கு எஸ்.எம்.கிருஷ்ணாவும் வாழ்த்து தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications