Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியான நம்பிக்கை.. பாஜகவுக்கு நடிகர் சுதீப் ஆதரவு! ஏமாந்துபோன பிரகாஷ் ராஜ்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் நடிகர் கிச்சா சுதீப் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் பாஜகவின் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு நடிகர் சுதீப் ஆதரவு தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜின் மொத்த நம்பிக்கையையும் உடைத்து ஏமாற்றியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. இதனால் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

Karnataka Election: Actor Kiccha Sudeep demolised actor prakash raj hope after supports to BJP

எப்படியாவது பாஜகவை வீழ்த்தி ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் உள்ளன. இதில் சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கூறினாலும் கூட பல கருத்து கணிப்புகள் பாஜகவை விட அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தற்போது வரை 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸில் 166 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை நிறுத்தும் வகையில் பாஜக ஆலோசித்து வருகிறது. இதனால் தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சுதீப் ஆதரவு

மேலும் மாநிலத்தில் பிரபலமானவர்களை பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாஜக முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சுதீப் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் சுதீப், ‛‛நான் முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரிக்கிறேன்.

ஆரம்ப காலத்தில் அவர் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தா். கஷ்ட காலங்களில் பக்கபலமாக இருந்தார். சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை மற்றும் அவரது ஆதரவு கோரும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், கட்சியில் இணையவோ, தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன்'' என தெரிவித்து இருந்தார்.

Karnataka Election: Actor Kiccha Sudeep demolised actor prakash raj hope after supports to BJP

லாபமடையும் பாஜக

இதன்மூலம் வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் சுதீப், பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது. முன்னதாக நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், இதுதொடர்பாக நடிகர் ரம்யா மூலம் காங்கிரஸ் தலைவர்கள் சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக நடிகர் சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக அறிவித்துள்ளது.

இவரது இந்த நடவடிக்கை காங்கிரஸ் உள்பட பிற கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் நடிகர் சுதீப்புக்கு மாநிலம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல் அவர் சார்ந்த எஸ்டி நாயகா சமுதாய மக்களும் மத்திய கர்நாடகா பகுதிகளில் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால் பாஜகவுக்கான சுதீப்பின் ஆதரவு கரம் நிச்சயம் அக்கட்சிக்கு பலன் கொடுக்கும் என கருதப்படுகிறது.

Karnataka Election: Actor Kiccha Sudeep demolised actor prakash raj hope after supports to BJP

ஏமாந்த நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்நிலையில் தான் நடிகர் சுதீப், நடிகர் பிரகாஷ் ராஜின் நம்பிக்கையை உடைத்து அவரை ஏமாற்றி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சுதீப் பாஜகவில் இணைவதாக நேற்று முன்தினம் செய்திகள் பரவின. இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் நம்பவில்லை. மேலும் நடிகர் சுதீப் பாஜகவில் இணைய உள்ளார் என்ற செய்தியை டேக் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், ‛‛இது முற்றிலும் பொய்யான செய்தி என நம்புகிறேன். கர்நாடகாவில் தோல்வி விளிம்பில் உள்ள பாஜகவினர் இதனை பரப்பியதாக நம்புகிறேன். கிச்சா சுதீப் ஒரு விவேகமான குடிமகன். இவர் ஒருபோதும் போலியான வலை விரிப்புக்கு இரையாக மாட்டார்'' என நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜின் நம்பிக்கையை உடைத்த நடிகர் சுதீப் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்ததோடு, பசவராஜ் பொம்மை மற்றும் அவர் கூறும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் பிரகாஷ் ராஜூம், அதிருப்தி அடைந்துள்ளார். இதுபற்றி நடிகர் பிரகாஷ் ராஜ், ‛‛நடிகர் சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறியது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது'' எனவும் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+