Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா தேர்தல்.. காங்கிரஸில் நடிகை ரம்யா போட்டி? மண்டியாவில் பாஜகவை வீழ்த்த வியூகம்! பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழில் குத்து, பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா கர்நாடகா சட்டசபை தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவை காங்கிரஸ் கையில் எடுக்கலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் தற்போது அரசியலில் இருந்து தூரமாக உள்ள நடிகை ரம்யா இந்த தேர்தல் மூலம் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் கர்நாடகாவுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடக்கும். ஏப்ரல் 21ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில் மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

வேட்பாளர் தேர்வில் தீவிரம்

வேட்பாளர் தேர்வில் தீவிரம்

கர்நாடகாவில் 224 தொகுதிகள் உள்ள நிலையில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் 124 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கும், ஆம்ஆத்மி சார்பில் 80 தொகுதிகளுக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த கட்சிகள் பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் பாஜகவும் 224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்து வருகிறது.

ஓல்டு மைசூர் மண்டலம்

ஓல்டு மைசூர் மண்டலம்

இந்நிலையில் தான் பாஜக, காங்கிரஸ் கட்சியை காட்டிலும் ஓல்டு மைசூர் மண்டலத்தில் ஜேடிஎஸ் கட்சி பலமாக உள்ளது. அதாவது ஹாசன், மண்டியா, மைசூர், குடகு, சிக்கமகளூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய ஓல்டு மைசூர் மண்டலத்தில் மொத்தம் 55 தொகுதிகள் உள்ளன. இங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி தான் எப்போதும் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் பாஜக வெற்றி பெற எப்போதும் சிரமத்தை சந்தித்து வருகிறது.

ஒக்கலிகர் ஓட்டுகள் அதிகம்

ஒக்கலிகர் ஓட்டுகள் அதிகம்

இதற்கு முக்கிய காரணம் அங்கு வாழும் மக்கள் தான். இந்த மைசூர் மண்டலத்தில் குமாரசாமியின் ஒக்கலிகர் சமுதாயத்தினர் தான் அதிகம் வசிக்கின்றனர். இதனால் தான் ஜேடிஎஸ் அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது. மாறாக பாஜக லிங்காயத் சமுதாயத்தினருக்கு தான் முதல்வர் பதவி வழங்கும் என்பதால் அக்கட்சியை ஓல்டு மைசூர் மண்டல மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த தேர்தலில் மைசூர் மண்டலத்தில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

உடையும் ஜேடிஎஸ் கோட்டை

உடையும் ஜேடிஎஸ் கோட்டை

குறிப்பாக ஜேடிஎஸ்ஸின் கோட்டையான மண்டியாவில் பாஜக தீவிர வியூகங்கள் வகுத்து வருகிறது. இந்த மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் வென்றது. அதன்பிறகு கேஆர்பேட்டை இடைத்தேர்தலில் ஜேடிஎஸ்ஸில் இருந்து பாஜகவுக்கு சென்ற நாராயணகவுடா மீண்டும் போட்டியிட்டு எம்எல்ஏவாகி அமைச்சரானார். அதேபோல் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியான நடிகை சுமலதா மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார். மாறாக குமாரசாமியின் மகன் நிகில் கவுடா தோல்வியடைந்தார். இதன்மூலம் ஜேடிஎஸ் கட்சியின் செல்வாக்கு சரிவதாக கூறப்படுகிறது.

பாஜகவில் சுமலதா அம்பரீஷ்

பாஜகவில் சுமலதா அம்பரீஷ்

முன்னதாக மண்டியா சட்டசபை தொகுதியில் கடந்த 2013 தேர்தலில் மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 2018 தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் சீனிவாஸ் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் மண்டியா தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய மண்டியா எம்பி சுமலதா அம்பரீஷ் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் கணவர் அம்பரீசின் செல்வாக்கை பயன்படுத்தி சுமலதா வெற்றி பெறலாம் என பாஜக கணக்கு போட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக தான் சுமலதா எம்பி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளார். இதன்மூலம் வரும் சட்டசபை தேர்தலில் சுமலதா மண்டியா சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் சுமலதா மூலம் மண்டியாவில் மேலும் சில இடங்களை கைப்பற்றலாம் என பாஜக நினைக்கிறது.

காங்கிரஸில் நடிகை ரம்யா?

காங்கிரஸில் நடிகை ரம்யா?

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ரம்யாவை மண்டியாவில் போட்டியிட வைக்கலாம் என கூறப்படுகிறது. நடிகை ரம்யாவும் மண்டியா எம்பியாக இருந்த நிலையில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 5,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். இதனால் நடிகை ரம்யாவை சுமலதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் நடிகை ரம்யாவும் மண்டியா மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர். இதனால் சுமலதாவை எளிதாக ரம்யாவால் வீழ்த்த முடியும். மேலும் அவர் சினிமா பிரபலம் என்பதால் மண்டியா மாவட்டத்தின் பிற தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என காங்கிரஸ் கணக்குப்போட்டுள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மண்டியா தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ரம்யா 2.0 என்ட்ரி கொடுக்க வாய்ப்பு

ரம்யா 2.0 என்ட்ரி கொடுக்க வாய்ப்பு

நடிகை ரம்யா கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரஸில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அதன்பிறகு மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 2013ல் நடந்த இடைத்தேர்தலில் நடிகை ரம்யா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரம்யா தோல்வியடைந்தார். ரம்யாவை ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளர் சிஸ் புட்டராஜூ 5,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நடிகை ரம்யா செயல்பட்ட நிலையில் அவர் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் அவர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் 2.0 என்ட்ரி கொடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+