"ஹிஜாப், ஹலால் பிரச்னைகள்.." வந்து விழுந்த கேள்வி.. ஒரே வரியில் பதிலளித்த எடியூரப்பா! என்ன சொன்னார்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா ஹிஜாப் மற்றும் ஹலால் இறைச்சி தொடர்பான சர்ச்சைகள் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கே அனைத்து கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது
அங்கே இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இருக்கிறது. தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கு வெல்ல பாஜக கடுமையாக முயல்கிறது.

கர்நாடக தேர்தல்: அதேநேரம் கடந்த 2018 தேர்தலிலேயே அங்கு பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவால் வெறும் 104 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் இணைந்து கூட்டணி அரசை அமைந்தது. இருப்பினும், ஆளும் கூட்டணி அரசில் இருந்து சில எம்எல்ஏக்கள் அங்குச் சென்ற பிறகே பாஜகவால் ஆட்சி அமைக்க முடிந்தது.
அந்த தேர்தலைக் கர்நாடகாவில் பாஜக முகமாக இருந்த எடியூரப்பாவை முன்னிறுத்தி பாஜக எதிர்கொண்டது. இருப்பினும், இந்த முறை அவரும் இல்லாமல் கர்நாடகாவில் பாஜக களமிறங்குகிறது. மாநிலத்தில் இருக்கும் பசவராஜ் பொம்மை அரசு மீது மக்களுக்குக் கோபம் இருந்தாலும் கூட தேசிய தலைமையை முன்னிறுத்தி பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே பிரபல ஆங்கில இதழுக்கு எடியூரப்பா அளித்த பேட்டியில் பல முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா: முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது, ஹலால் இறைச்சி விற்பது தொடர்பான சர்ச்சைகள் தேவையற்றவை என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், "நான் இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கப் போவதில்லை.. என்னைப் பொறுத்தவரை, இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர சகோதரிகளைப் போல வாழ வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, நான் இதே நிலைப்பாட்டில் தான் இருந்துள்ளேன்" என்றார்.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று கர்நாடகா அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டு ஹிஜாப் அணியத் தட விதித்து. சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் எந்த ஆடைகளையும் அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ஹிஜாப் அணிந்த பெண்களுக்குக் கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

என்ன பிரச்சினை: இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கே நீதிபதிகள் இரு விதமான தீர்ப்பை அளித்தனர்.
அதேபோல கர்நாடகாவில் பல இந்துத்துவா அமைப்புகள் ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்தன. இந்த இரண்டுமே கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த இரண்டும் தேவையற்றது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அழைப்புகள் இருந்தபோதிலும் தேவாலய நிகழ்ச்சிகளில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொள்ளாத நிலையில், இது குறித்துப் பதிலளித்த அவர்,"நான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் நிகழ்ச்சிகளுக்குச் செல்வேன்.. மற்ற சமூக திட்டங்களுக்குக் கூட. பொம்மையும் செல்வது வழக்கம். அவர்கள் அழைத்திருந்தால் இந்த நிகழ்வுகளுக்கு அவர் சென்றிருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications