திடீரென கோவிலுக்கு செல்ல மறுத்த ராகுல்.. ஷாக்கான நிர்வாகிகள்.. ட்விஸ்ட்டுக்கு பின் நெகிழ்ச்சி..செம!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கோவிலுக்கு அழைத்தபோது ராகுல் காந்தி செல்ல மறுத்து தயங்கினார். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி கேட்ட கேள்வியை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து ராகுல் காந்தி கோவிலுக்குள் சென்றார். உண்மையில் என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. பாஜகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்? என்பதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உறுதியாக இருப்பதோடு, மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றர்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ராகுல் காந்தி பாஜக செல்வாக்காக உள்ள உடுப்பி மாவட்டத்துக்கு சென்றார்.

உடுப்பி என்பது கடலோர மாவட்டமாக உள்ளனர். ஏராளமான மக்கள் மீன்பிடித்தல், மீன்விற்பனை தொழில் செய்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாக்குகளை பெறும் முனைப்பில் ராகுல் காந்தி உடுப்பி மாவட்டம் காபுவில் மீனவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு அஞ்சலா எனும் மீனை மீனவர்கள் பரிசாக கொடுத்தனர். இந்த மீனை ராகுல் காந்தி தொட்டு பார்த்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து மீனவர்களுடன் சேர்ந்து போட்டோக்கள் எடுத்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் உச்சிலாவில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் ராகுல் காந்தியை அழைத்து சென்றனர். அப்போது கோவில் வரை சென்ற ராகுல் காந்தி உள்ளே செல்ல தயங்கினார். இதை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோவிலுக்கு வரும்படி ராகுல் காந்தியிடம் கூறினர். அப்போது ராகுல் காந்தி, ‛‛நான் மீனை கையால் தொட்டுவிட்டேன். இன்னும் கையை கழுவவில்லை. இப்படி இருக்கும்போது கோவிலுக்கு செல்லலாமா?'' என கேட்டார்.

ராகுல் காந்தியின் இந்த கேள்வியை கேட்ட காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்ததோடு, கோவிலுக்குள் அவர் வர தயங்கியதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டனர். இதற்கிடையே தண்ணீர் கொண்டு வரும்படி ராகுல் காந்தி கூறினார். ஆனால் தண்ணீர் கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே மீன் தொட்டாலும் பரவாயில்லை. தாராளமாக கோவிலுக்குள் வரலாம் என கோவிலில் வழிபாடு செய்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் கட்சியினர் ராகுல் காந்தியை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அதன்பிறகும் கோவில் கருவறை அருகே செல்லாத ராகுல் காந்தி வளாகத்திலேயே நின்று தரிசனம் செய்தார். ராகுல் காந்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications