ஜஸ்ட் 160 ஓட்டு தான்.. பெங்களூர் ஜெயநகரில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர்! பாஜக வைத்த ட்விஸ்ட்! ரீகவுண்ட்
பெங்களூர்: பெங்களூர் ஜெயநகர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 160 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக வேட்பாளர் சந்தேகம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மறு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது. கர்நாடகா 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அரியணை ஏறுகிறது. இந்த தேர்தலில் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

இந்த தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக படுதோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தாலும் கூட பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 28 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி ஒரு தொகுதியிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூர் ஜெயநகர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ சவுமியா ரெட்டி மீண்டும் போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், பிடிஎம் லேஅவுட் எம்எல்ஏவுமான ராமலிங்க ரெட்டியின் மகள் ஆவார். ஜெயநகர் தொகுதியில் சவுமியா ரெட்டியை எதிர்த்து பாஜக சார்பில் சிகே ராமமூர்த்தி போட்டியிட்டார்.
இருவர் இடையேயும் கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் கூட இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். மேலும் வாக்கு வித்தியாசம் என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஜெயநகர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இறுதியில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி 2வது இடம் பிடித்தார்.

இதனை பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி ஒப்புக்கொள்ளவில்லை. மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மறு ஓட்டுப் எண்ணிக்கை நடத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications