ஸ்வீட் எடு கொண்டாடு! காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு அடித்த முதல் கோல்!
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிமுகத்தில் உள்ளதால் ஸ்வீட் எடு கொண்டாடு என்கிற விதமாக தங்களது முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் டீம்.
2016 தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கும், 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கும் ஒர்க் அவுட் செய்த தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில், 2023 கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார்.
அதுமட்டுமல்ல 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூக வகுப்பாளராகவும் சுனில் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றி வருகிறார்.

பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுனில் கனுகோலு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து திமுகவுக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் பணிகளை கவனித்துக் கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்டாலின் கலர் கலராக சட்டை அணிந்துக்கொண்டு நமக்கு நாமே என்ற முழக்கத்துடன் நடைபயணம் சென்றதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நடைபயணத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் சுனில்.
அதேபோல் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்களுக்கும் இவர் தான் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தார். இந்நிலையில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் புதுவரவாக தேர்தல் வியூகம் வகுக்க வந்ததால் அங்கிருந்து வெளியேறி சில மாதங்கள் ஐதராபாத்திலேயே இருந்து வந்தார்.
பிறகு எடப்பாடி பழனிசாமி டீம் மூலம் அதிமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக கடந்த 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் பணியாற்றினார். இவர் பணியாற்றிய இரண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் முடிவுகள் முரணாக வந்தன.

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் என்ட்ரி கொடுத்த சுனில் கனுகோலு, அக்கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் நடைபயணம் இவர் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் தான் எனக் கூறப்படுகிறது. அது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் நல்லமுறையில் ஒர்க் அவுட் ஆகி காங்கிரஸ் வெற்றிமுகத்தில் உள்ளது.
இதனால் சுனில் கனுகோலு டீம் ஸ்வீட் எடு கொண்டாடு என்கிற வகையில் சட்டசபைத் தேர்தல்களில் தாங்கள் அடித்த முதல் கோலை கொண்டாடத் தயாராகி வருகிறது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications