‛பிளான் பி’யை கையில் எடுக்கும் பாஜக.. கர்நாடகாவில் துவங்கும் ‛ரெசார்ட்’ அரசியல்.. காங்கிரஸ் ‛அலர்ட்’

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பாஜகவினர் ‛பிளான்-பி' யை கையில் எடுப்பதாக கூறிய நிலையில் மீண்டும் ‛ரெசார்ட்' அரசியல் துவங்க உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி அலர்ட்டாகி முன்னெச்சரிக்கையாக சில திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். கடந்த 2018ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

Karnataka Election Result: Fear of Operation Kamala, Congress decided to will secure winning cadidates in resort

அந்த தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் தொங்கு சட்டசபை உருவானது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்தனர். முதல்வராக ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி செயல்பட்டார்.

இந்த கூட்டணி ஆட்சி ஓராண்டு மட்டுமே நடந்தது. இதையடுத்து காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவின. இதனால் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆட்சி அமைந்து இன்று வரை அதிகாரத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 10ம் தேதி கர்நாடகா தேர்தல் நடந்தது. ஒரே கட்டமாக 224 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடந்தது.

இதில் மொத்தம் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 36 மையங்களில் ஓட்டு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் தேர்தலுக்கு பிந்தைய பெரும்பலான கருத்து கணிப்புகளில் தொங்கு சட்டசபை உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவும் 80 முதல் 100 தொகுதிகளில் வாகை சூடலாம் எனவும், ஜேடிஎஸ் 25 முதல் 30 தொகுதிகளில் ஜெயிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் 2018 யை போல் ஜேடிஎஸ் உள்பட பிற கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

மாறாக 100 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட்டணிக்கு பதில் வெற்றி பெறும் சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட சிலரை தங்கள் வசம் இழுத்து ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ‛ஆபரேஷன் தாமரை' மூலம் ஆட்சியை எட்டிப்பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பா வருவாய்த்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஆர் அசோக், ‛‛நாங்கள் அரசியல்வாதிகள். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பாஜக ஆட்சி அமைக்கும். இதற்கு பிளான் பி உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய பிளான் பி என்பது ஆபரேஷன் தாமரை திட்டம் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். தற்போதே அதற்கான பணியை பாஜக தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர்கள் பாஜகவுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா, டிகே சிவக்குமார் உள்பட முக்கிய தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அதன்படி நாளை தேர்தல் முடிவில் அதிகளவில் முன்னிலை பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை உடனடியாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வெற்றி வேட்பாளர்களை ஒன்றாக இணைத்து ரெசார்ட்டில் தங்கவைக்க முடிவு செய்துள்ளதக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கர்நாடகா அரசியல் களம் ரிசல்ட்டுக்கு முன்பே பரபரப்பை எட்டியுள்ளது.
*******

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+