கண்அசந்தா பாஜக வேலையை காட்டிடுமாம்.. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? காங்கிரஸ் புது பிளான்.. அடடே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியை தாண்டி 130 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் பதவி யாருக்கு? வழங்கப்படும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 224 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு இன்று காலை 8 மணி முதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக பெரிய அளவில் தோல்வியடைந்துள்ளது.

மதியம் 12.30 மணியளவில் பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஜேடிஎஸ் கட்சி 21 தொகுதிகளிலும், மாற்றவர்கள் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர். காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது. மேலும் தனி மெஜாரிட்டிக்கு 113 தொகுதிகள் தான் தேவை எனும் நிலையில் காங்கிரஸ் அதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தொங்கு சட்டசபை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதோடு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் தான் அடுத்தக்கட்டமாக காங்கிரஸில் முதல்வர் பதவி மீது 2 பேர் கண்வைத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவி மீது குறிவைத்துள்ளனர். இந்நிலையில் தான் இருவரில் யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.
மேலும் முதல்வர் பதவி என்பது ஒருவருக்கு மட்டும் தான் வழங்க முடியும். இதனால் இருவரில் ஒருவருக்கு அதிருப்தி எழலாம். ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வேளையில் இருதலைவர்கள் இடையேயான அதிருப்தி ஏற்பட்டால் அது நன்றாக இருக்காது என காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. இதனால் தான் காங்கிரஸ் இருவரையும் சமாதானம் செய்யும் வகையிலும் கோஷ்டி பூசலை தடுக்கும் வகையில் புதிய பிளானை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது 5 ஆண்டு ஆட்சியில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பகிர்ந்து வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடக்கும் பட்சத்தில் யாருக்கு முதல் இரண்டரை ஆண்டுகள் என்ற கேள்வி எழும். இதற்கும் காங்கிரஸ் கட்சி தனி திட்டத்தை வைத்துள்ளது.
அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாருக்கும் வழங்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் இப்போது டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கினால் அது சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதாவது டிகே சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை உள்பட பல விசாரணை அமைப்புகளில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கினால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது கர்நாடகா அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தலாம். அதோடு மட்டுமின்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால் தான் இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
*******
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications