ஸ்கோர் செய்யும் திமுக.. கர்நாடகாவிலும் ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்.. கையை பிசையும் பாஜக தலைவர்கள்
பெங்களூரு: திமுக பாணியில் கவர்ச்சியான இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களை போல கர்நாடகா வாக்காளர்களும் மாற்றத்தை தருவார்கள் என்ற நம்பிக்கையில் செய்திருந்தது காங்கிரஸ். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஸ்டாலின் மாடல் இப்போது கர்நாடகாவிலும் ஒர்க்அவுட் ஆகி உள்ளது.
2021இல் திமுக தேர்தல் வாக்குறுதியாக ,பெண்களுக்கு மாதம் ஆயிரம் உதவி தொகை, மகளிருக்கு பேருந்தில் இலவசம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதேபோன்று தான் கர்நாடகாவில் காங்கிரஸ் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்தது.

மாதம் பெண்களுக்கு 2000 உதவி தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3000 உதவி தொகை, டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 உதவி தொகை , குடும்பத்திற்கு 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருந்தது.
இந்நிலையில் ஸ்டாலின் மாடல் வாக்குறுதிகள் எல்லாம் வாக்குகளாக கர்நாடகாவில் அறுவடை ஆகும் என்றே எல்லா தேர்தல் கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்தன. அதன்படிய ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் இன்று வாக்கு எண்ணிக்கையின் போது ஒர்க்அவுட்டாகி இருக்கிறது.
மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 116 இடங்கிளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 74 இடங்களிலும், ஜேடிஎஸ் 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 6 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இதன் மூலம் கர்நாடகாவிலும் ஸ்டாலின் பெயர் இன்று பேசப்படுகிறது. திமுக கையாண்ட அதே யுக்தியை காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் செய்திருந்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகா மக்கள் திமுக பாணியிலான இலவச வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியிருப்பதால், தேர்தலில் போட்டியிடாமலேயே திமுக பெரிய ஸ்கோர் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு எதிராக மற்ற மாநிலங்களில் எப்படி வேலை செய்தது என்பதை விட , கர்நாடகாவில் எப்படி வேலை செய்தது என்பது நிச்சயம் பார்க்க வேண்டும். டிகே சிவகுமாரின் அதிரடி வியூகம், மொத்த கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை தந்தது என்று சொல்லலாம்.
பாஜக மற்ற எல்லா மாநிலங்களைப் போல் இல்லாமல் கர்நாடகாவில் மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளது என்பது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. திமுகவின் இந்த மாடலை 2024 தேர்தலிலும் காங்கிரஸ் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்










Click it and Unblock the Notifications