பாஜக வைத்த ‛செக்’.. ‛அந்தர் பல்டி’ அடிக்கும் சித்தராமையா.. அண்ணாமலை கிண்டல்.. திரும்பும் காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் சித்தராமையாவின் தேர்தல் செயல்பாடு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2018 ல் தேர்தல் நடந்தது. இதனால் கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே 24ல் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அதற்கு முன்பாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றுவதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த 2 கட்சிகளுக்கும் தனிமெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் கிங்மேக்கராக மாறும் முனைப்பில் ஜேடிஎஸ் கட்சி இயங்கி வருகிறது.
தற்போதைய சூழலில் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. இதில் 2 பேர் மட்டும் 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தற்போது வருவாய்த்துறை அமைச்சராக உள்ள ஆர் அசோக் பெங்களூர் பத்மநாபநகர் மற்றும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். பத்மநாபநகர் அவரது சொந்த தொகுதியாக இருக்கும் நிலையில் கனகபுராவில் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாரை எதிர்த்து அவர் களமிறங்கி உள்ளார்.
இதபோல் வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா மைசூர் மாவட்டம் வருணா மற்றும் சாம்ராஜ்நகர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் தற்போது பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் தொகுதி மாறியுள்ளார். சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த நிலையில் சாம்ராஜ்நகரில் அவர் களமிறங்கிய நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வரான காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவை தோற்கடிக்க வருணா தொகுதியிலும் போட்டியில் குதித்துள்ளார்.
இதில் வருணா என்பது சித்தராமையாவின் சொந்த தொகுதியில் கடந்த 2008, 2013 தேர்தலில் இங்கு வென்ற சித்தராமையா கடந்த முறை தனது மகன் யதீந்திராவுக்காக தொகுதியை விட்டு கொடுத்தார். யதீந்திரா வென்ற நிலையில் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரியில் தோற்ற சித்தராமையா பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வென்றார்.
இந்த முறை சித்தராமையா கோலார் தொகுதியில் வாய்ப்பு கேட்டார். ஆனால் உள்கட்சி பிரச்சனையில் அங்கு சித்தராமையாவின் வெற்றி சவாலானது என கருதிய காங்கிரஸ் மேலிடம் அவருக்கு மீண்டும் வருணா தொகுதியில் வாய்ப்பு வழங்கியது. இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்வராகலாம். இதனால் தான் சித்தராமையாவை வீழ்த்த அமைச்சர் சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். வருணாவில் லிங்காயத் சமுதாயத்தின் வாக்குகள் சுமார் 55 ஆயிரம் என்ற அளவில் உள்ள நிலையில் லிங்காயத்தான சோமண்ணாவை பாஜக நிறுத்தி உள்ளது. இதனால் வருணா தொகுதியில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூரில் தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா பாஜக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரான சித்தராமையா தோற்கடிப்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛கர்நாடகாவில் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வருணா தொகுதியில் பிரசாரம் செய்ய மாட்டேன் என்றார். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. சித்தராமையா வருணா தொகுதியை விட்டு வெளியே வருவது இல்லை'' என கிண்டல் செய்தார். அதாவது வேட்புமனு தாக்கல் செய்து தொகுதியில் பிரசாரம் செய்யமாட்டேன் என்ற சித்தராமையா தனது தொகுதியிலேயே இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், ‛‛வருணா தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் சோமண்ணாவை நிறுத்தி உள்ளோம். கர்நாடகா அரசியலின் பிம்பத்தை சோமண்ணா மாற்ற உள்ளார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மாற்ற அவர் தயாராக உள்ளார், சாம்ராஜ்நகர், வருணா தொகுதியில் மாற்றம் நிகழ போகிறது. அதேபோல் அவர் எம்எல்ஏவாக உள்ள பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதியிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார்'' என்றார்.
****












Click it and Unblock the Notifications