Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரிலும் சாதி அரசியல்.. பாஜக, காங்கிரசுக்கு அதிகம் ஓட்டளித்தது எந்த பிரிவினர் தெரியுமா? விபரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் பெங்களூர் உள்பட 6 மண்டலங்களில் வசிக்கும் மக்களிடம் சாதி, சமுதாயம் அடிப்படையில் எந்தெந்த மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டளித்தனர் என்பது வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை இந்தியாடுடே-ஆக்சிஸ் ஆப் இந்தியா நடத்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்நிலையில் தான் நாளை ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஓட்டு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 Karnataka Election: Which Community and castes people voted to congress and BJP in Bengaluru, explains India Today Exit Poll

நாளை காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. மாலைக்குள் கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த கடந்த 10ம் தேதி மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஏராளமான கருத்து கணிப்புகள் அன்றயை தினம் வெளியாகின.

காங்கிரசுக்கு வெற்றி: இதில் ஒரு கருத்து கணிப்பு தான் இந்தியா டுடே -ஆக்சிஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளில் வெல்லும். பாஜக 67 முதல் 80 தொகுதிகளை மட்டுமே பிடித்து தோல்வியை தழுவும். ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 25 தொகுதிகளில் ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதிவாரியாக எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பதையும் இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் மொத்தம் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பெங்களூர் உள்பட 6 மண்டலங்களிலும் எந்தெந்த சாதி, சமுதாயத்தினர் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்கி உள்ளனர் என்பது பற்றிய விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

கடலோர கர்நாடகா: கடலோர மாவட்டங்களாக உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் உள்ளன. இங்கு மொத்தம் 19 தொகுதிகள் உள்ளன. இது பாஜகவின் கோட்டையாகும். இந்நிலையில் தான் இந்த மாவட்டங்களில் பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ்க்கு பூஜ்ஜியம் இடங்கள் தான் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கடலோர கர்நாடகா மாவட்டங்களில் Forward Castes(பட்டியலிடப்படாத சமுதாயத்தினர்) பிரிவு மக்கள் 76 சதவீதம் பேர் பாஜக ஆதரவு தெரிவிப்பபது தான். இந்த பிரிவை சேர்ந்தவர்களில் 15 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவாக உள்ளனர். இதனால் தான் இங்கு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

மத்திய கர்நாடகா: மத்திய கர்நாடகாவில் மொத்தம் 23 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மத்திய கர்நாடகா மாவட்டங்களை பொறுத்தமட்டில் எஸ்சி எஸ்டி, குருபா, முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர். ஒக்கலிகர், லிங்காயத்துகள், உயர்வகுப்பினர் என அழைக்கப்படும் பிரிவினர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத்-கர்நாடகா: ஹைதராபாத்-கர்நாடகா மாவட்டங்களில் 40 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், ஜேடிஎஸ் 1 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்-கர்நாடகா மாவட்டங்களை பொறுத்தமட்டில் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். இங்குள்ள ஆதிதிராவிட மக்களின் ஓட்டுகளை பாஜகவை விட காங்கிரஸ் கட்சி ஒருமடங்கு அதிகம் பெறுகிறது. அதன்படி இங்குள்ள ஆதிதிராவிட மக்களில் காங்கிரஸ் கட்சிக்கு 56 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 28 சதவீதம் பேரும் ஆதரவு அளிக்க உள்ளனர். மற்றவர்கள் பிற கட்சிகளுக்கு ஓட்டளிக்க உள்ளனர். இருப்பினும், இப்பகுதியில் வசிக்கும் லிங்காயத்கள், ஓபிசி பிரிவினர், மாராத்தா மற்றும் உயர்வகுப்பினர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

மும்பை-கர்நாடகா: மும்பை கர்நாடகா மாவட்டஙகளில் மொத்தம் 50 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் ஜேடிஎஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மும்பை -கர்நாடகா மாவட்டங்களை பொறுத்தமட்டில் லிங்காயத் மற்றும் மாராத்தா பிரிவினர் அதிகம் உள்ளனர். இந்த பிரிவு மக்கள் எப்போதும் பாஜகவுக்கு பக்கபலமாக உள்ளனர். இதனால் மும்பை-கர்நாடகா மாவட்டங்கள் பாஜகவின் கோட்டையாக உள்ளது. இருப்பினும் இங்குள்ளள ஆதிதிராவிடர்கள், குருபா மற்றும் முஸ்லிம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர். இருப்பினம் மாரத்தா, ஓபிசி பிரிவினரை பொறுத்தமட்டில் காங்கிரஸை விட அதிக ஓட்டுகளையும், லிங்காயத்துகளில் காங்கிரஸை விட பாஜக 3 மடங்கு அதிக ஓட்டுகளையும் பெறுகின்றனர். குறிப்பாக இங்கு 40 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களின் ஆதரவை பாஜக பெறுகிறது. இருப்பினும் இந்த முறை காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பழைய மைசூர்: பழைய மைசூர் மாவட்டங்களில் மொத்தம் 62 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களை கைப்பற்றும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 18 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் மற்றவர்கள் 3 இடங்களிலும் வெல்வார்கள் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய பகுதியாக இது உள்ளது. இங்கு ஒக்கலிகர் சமுதாய மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். கருத்துக்கணிப்பின்படி, 52 சதவீத ஒக்கலிகர் ஓட்டுக்கள் ஜேடிஎஸ் கட்சிக்கு கிடைக்கும். 23 சதவீத ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், 21 சதவீத ஓட்டுக்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருபாக்கள், எஸ்சி, எஸ்டி, முஸ்லிம்களின் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிகம் கிடைக்கும். லிங்காயத் மற்றும் உயர்சாதி வகுப்பினரின் ஓட்டுக்களை பாஜக அதிகம் பெறும். இருப்பினும் இங்கு வசிக்கும் ஒபிசி பிரிவு மக்களின் ஓட்டுக்களை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சமமாக பெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இங்கு ஓபிசி மற்றும் லிங்காயத் மக்கள் பாஜகவுக்கும், எஸ்சி, எஸ்டி, குருபா, முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். பெண்கள் மத்தியில் பாஜகவை விட காங்கிரஸ் 10 சதவீதம் வரை செல்வாக்கு உள்ளது. இதனால் தான் 2 நாட்கள் பிரதமர் மோடி பிரசாரம் செய்தாலும் கூட இந்தியா டுடே கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களில் ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+