போன மச்சான் திரும்பினாரு.. காங்கிரஸுக்கு ஓடிய கர்நாடகா மாஜி சிஎம் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில்!
பெங்களூர்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸுக்கு ஓடிப் போன கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் லிங்காயத் ஜாதி முகமான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் மறுத்தது பாஜக மேலிடம். மேலும் அரசியலில் இருந்து விலக வேண்டும் என ஜெகதீஷ் ஷெட்டருக்கு அட்வைஸ் செய்தது பாஜக மேலிடம்.

இதில் கடும் அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட்டார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனால் 34,289 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார் ஜெகதீஷ் ஷெட்டர். அப்போது கூட மத்திய அமைச்சர் அமித்ஷாதான் தம்மை தோற்கடிக்க காரணம் என புலம்பி இருந்தார் ஜெகதீஷ் ஷெட்டர். பின்னர் அவர் எம்.எல்.சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துவிட்டார் ஜெகதீஷ் ஷெட்டர். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை தெரிவித்திருந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்து கொண்டார்.
ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவுக்கு ஓடிப் போனது குறித்து கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே கூறுகையில், கர்நாடகாவின் தற்போதைய பாஜக மாநில தலைவர் மீது அக்கட்சியின் மேலிடத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதையே ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் அக்கட்சியில் இணைந்திருப்பது வெளிப்படுகிறது. காங்கிரஸ் கட்சி யார் ஒருவரையும் நம்பி இருக்கவில்லை. இதனால் காங்கிரஸுக்கு எந்த பேரிழப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சி உள்ளூர் தலைவர்கள், தொண்டர்களை நம்பித்தான் இருக்கிறது என்றார். ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்ததை கர்நாடகா மாநில பாஜக தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
சித்தராமையா கருத்து: ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இணைந்தது குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், பாஜகவில் அவமதிக்கப்பட்டதாக கூறி காங்கிரஸில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர். அவருக்கு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. தேர்தலில் தோற்ற ஜெகதீஷ் ஷெட்டருக்கு எம்.எல்.சி பதவி கொடுத்தோம். அவருக்கான மரியாதையை காங்கிரஸ் கொடுத்து வந்தது. ஒருபோதும் பாஜகவுக்கு நான் போகவே மாட்டேன் என்றுதான் என்னிடம் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். இப்போது பாஜகவுக்கு அவர் திரும்பியது குறித்து எந்த தகவலும் எனக்கு இல்லை என்றார்.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications