Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியை பாஜகவுக்கு கொண்டு வந்த அண்ணாமலை.. யார் இந்த பாஸ்கர் ராவ்? முழு பின்னணி

பாஜகவில் இணைந்த பாஸ்கர்ராவ் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பாஸ்கர்ராவ் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். கடந்த ஆண்டு அவர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ஆம்ஆத்மியில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பாஜகவில் இணைந்ததன் பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பங்கு இருக்கும் விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் அங்கு வாக்குப்பதிவு நடைபெறலாம் என கூறப்படுகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த முறை அங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்நாடகாவுக்கு படையெடுக்கும் தலைவர்கள்

கர்நாடகாவுக்கு படையெடுக்கும் தலைவர்கள்

இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தற்போது தீவிரமாக களப்பணி ஆற்ற தொடங்கி உள்ளனர். மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வெற்றி பெறும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை கட்சி மேலிட தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு வெற்றி வாய்ப்பு குறைவான பகுதிகளில் வியூகங்களை மாற்றி செய்து நெகட்டிவ்வை பாசிட்டிவ்வாக மாற்றும் பணியிலும் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர். பாஜகவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டவர்களும், காங்கரிஸில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி உள்பட மூத்த தலைவர்களும் அடிக்கடி கர்நாடகாவுக்கு விசிட் அடித்து வருகின்றனர்.

பாஜகவில் இணைந்த பாஸ்கர்ராவ்

பாஜகவில் இணைந்த பாஸ்கர்ராவ்

இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு கட்சியினரும், மாற்று கட்சி தலைவர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பஞ்சாயத்து உறுப்பினர் முதல் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், எம்பிக்களை தங்கள் வசப்படுத்த கட்சியினர் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர்ராவ் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். கடந்த 1ம் தேதி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பாஸ்கர்ராவ் பாஜகவில் இணைந்தார்.

பிரதமர் மோடியால் ஈர்ப்பாம்

பிரதமர் மோடியால் ஈர்ப்பாம்

அதன்பிறகு பாஜகவில் இணைந்த பாஸ்கர்ராவ் கூறுகையில், ‛‛32 ஆண்டுகள் கர்நாடகாவில் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினேன். மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் இணைந்தேன். ஆம்ஆத்மி கட்சியில் வெளிப்படை தன்மை இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடும் தொலைநோக்கு பார்வையும் என்னை மிகவும் ஈர்த்தது. அதனால் பாஜகவில் இணைந்துள்ளேன்'' என்றார்.

அண்ணாமலையுடன் பரீட்சயம்

அண்ணாமலையுடன் பரீட்சயம்

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாஸ்கர் ராவை பாஜகவில் இணைந்ததில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அண்ணாமலையும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூரில் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார். இதனால் இருவருக்கும் ஏற்கனவே பரீட்சயம் இருந்தது.

பாஜகவில் இணையும் முன் பேச்சு

பாஜகவில் இணையும் முன் பேச்சு

இதற்கிடையே தான் பாஸ்கர்ராவ் பாஜகவில் இணைய முடிவு செய்த நிலையில் அவர் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர் அசோக், கர்நாடக தேர்தலுக்கான பாஜகவின் இணை பொறுப்பாளரும், தமிழக பாஜக தலைவருமான‌ அண்ணாமலை மற்றும் கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் கட்டீலை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தான் பாஸ்கர்ராவ் பாஜகவில் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் சமீபகாலமாக பாஸ்கர்ராவ், அண்ணாமலையுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

யார் இந்த பாஸ்கர்ராவ்?

யார் இந்த பாஸ்கர்ராவ்?

இவர் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். கடந்த ஆண்டு ஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார். டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டார். மேலும் கர்நாடகா மாநில ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் பொறுப்பையும் பெற்றார். இவ்வாறு கடந்த 11 மாதமாக அவர் ஆம்ஆத்மி கட்சியில் பயணித்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+