300 பெண்களுடன் உல்லாசம்? கசிந்த ஆபாச வீடியோக்கள்.. மாஜி பிரதமர் பேரனுக்கு சிக்கல்.. எஸ்ஐடி விசாரணை
பெங்களூர்: கர்நாடகா பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் தொகுதி வேட்பாளரும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அவர் வெளிநாடு பறந்து சென்றுள்ளார். கர்நாடகாவில் பூதாகரமாகி உள்ள இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜேடிஎஸ் கட்சியை நடத்தி வருகிறார். கர்நாடகாவில் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.
பாஜக கூட்டணி சார்பில் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இவர் தற்போது ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுகிறார்.

பிரஜ்வெல் ரேவண்ணா யார் என்றால் தேவகவுடாவின் பேரன் ஆவார். அதாவது தேவேகவுடாவின் மகனும், ஹொலேநரசிப்புரா தொகுதியின் எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா.
பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் ஹாசன் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் சேர்ந்து இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் பரப்பி விடப்படுகிறது. மொத்தம் அவர் 300 பெண்களுடன் நெருக்கமாக இருந்தாகவும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே வெளியாகி உள்ளதாகவும் கன்னட செய்தி சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை 100க்கும் அதிகமான வீடியோக்கள் வெளியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும், அந்த பென் டிரைவ் வீடியோக்கள் தான் தற்போது கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. தேர்தல் வேளையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் பரப்பி விடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தற்போது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் பிரஜ்வெல் ரேவண்ணா இப்போது ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஜெர்மனி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications