"தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை.." மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரிய கர்நாடக அரசு
பெங்களூர்: மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைத் தாண்டி கர்நாடக அரசு தொடர்ந்து இதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. அதில் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே மேகதாது விவகாரத்தில் நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது.

ஆனால், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கும் நீர் தடைப்படும் என்பதால் தமிழக அரசு இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
கர்நாடக அரசு: இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தர மத்திய அரசிடம் இப்போது கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. கர்நாடக அரசு ஏற்கனவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் கடந்த மே 20ம் தேதி கோரியிருந்தது.
தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை: கூடுதல் தகவல்களை மத்திய அரசு கோரியிருந்த நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி கர்நாடக நீர்வளத்துறைப் பதிலளித்து கடிதம் எழுதியிருந்தது. அது தொடர்பான தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த விண்ணப்பம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவால் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த செயல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications