கார்கே மகனுக்கு நிலம் ஒதுக்கீடு முறைகேடு- கர்நாடகா மாநில தலைமை செயலாளருக்கு ஆளுநர் புது நோட்டீஸ்!
பெங்களூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் ராகுல் கார்கேவுக்கு விமானவியல் பூங்காவில் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் புதியதாக நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்வர் சித்தராமையா மனைவிக்கு நில ஒதுக்கீடு விவகாரத்திலும் ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான மூடா, சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது என்பது குற்றச்சாட்டு. இதனை முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக மறுத்தார்.

ஆனால் இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா விளக்கம் தர கோரி அம்மாநில ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸை திரும்பப் பெற கோரி கர்நாடகா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரவும் ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தார். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் அடுத்த சிக்கலில் சிக்கி இருக்கிறார். கார்கே மகன் ராகுல் கார்கேவுக்கு விமானவியல் பூங்காவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது சட்டவிரோதம் என பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக ஆளுநர் கெலாட்டை சந்தித்தும் மனு கொடுத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என கர்நாடகா மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீசுக்கு ஆளுநர் கெலாட் புதியதாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதனிடையே தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதால் கர்நாடகா தொழில்துறைஅ மைச்சர் எம்பி பட்டீல் மீதும் வழக்கு தொடர ஆளுநர் கெலாட்டிடம் அனுமதி கோரியுள்ளார் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி. இது தொடர்பாகவும் விளக்கம் தர வேண்டும் எனவும் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கெலாட் மற்றொரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications