நீட் தேர்வையே ரத்து செய்யுங்க-மாநில அரசுகளே தேர்வு நடத்தட்டும்.. தமிழ்நாட்டுடன் கை கோர்த்த கர்நாடகா!
பெங்களூர்: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறையையே மத்திய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா அரசும் வலியுறுத்தி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் தொடருகின்றன. நீட் நுழைவுத் தேர்வால் மாநில பாடங்களில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகிறது. இதனால் தமிழ்நாட்டில் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டனர். இந்தப் பேரவலம் இன்னமும் தொடருகிறது. இதனால்தான் தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தரக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இன்னொரு பக்கம் நீட் நுழைவுத் தேர்வில் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு முறைகேடுகள் கொடி கட்டிப் பறக்கின்றன. இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வு முறைக்கு எதிராகப் போராடி வந்தது. தற்போது பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வு முறை, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து உக்கிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வட இந்திய மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியிருந்தார். தற்போது தமிழ்நாட்டைப் போலவே நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் வலியுறுத்தி உள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வு முறையை கைவிட்டுவிட வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் டிகே சிவகுமார் வலியுறுத்தி இருக்கிறார்.
நீட் தேர்வு முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால்தான் நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்கிறோம் என்றும் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications