எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பரிவர்த்தனையை உடனே நிறுத்துங்க.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூர்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் ஆகிய 2 வங்கிகளில் உள்ள அரசின் அனைத்து வங்கி கணக்குகளையும் உடனடியாக மூடி, டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டும் கர்நாடக அரசின் நிதித்துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மேலும் எவ்வளவு நிதி உள்ளது என்பதை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையே, கர்நாடகத்தில் வால்மீகி வளர்ச்சி வாரியம், போவி வளர்ச்சி வாரியம் உள்பட பல வளர்ச்சி வாரியங்களின் நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிதித்துறை சுற்றறிக்கை: மேலும் இதில் அரசு வங்கி கணக்குகளில் வைத்திருந்த நிதி முறைகேடாக பல வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கர்நாடக அரசின் நிதித்துறை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், அவர் கூறியதாவது:-
வங்கி கணக்குகளை மூட வேண்டும்: பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கிகளின் அனைத்து கிளைகளில் உள்ள அரசு வங்கி கணக்குகளையும் மூட வேண்டும். அந்த வங்கி கணக்குகளில் உள்ள அனைத்து நிதியையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த உத்தரவு மாநில அரசின் அனைத்து துறைகள், பொது நிறுவனங்கள், வாரியம், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் என அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
20 ஆம் தேதிக்குள்: இந்த இரண்டு வங்கிகளில் உள்ள அரசு டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதுடன், உடனே வங்கி கணக்குகளை மூட வேண்டும். அத்துடன் இனிமேல் அந்த வங்கிகளில் எந்த முதலீடும் செய்யக் கூடாது. அனைத்து துறைகளின் வங்கி கணக்குகளை மூடி, எவ்வளவு நிதி உள்ளது என்பதை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகபெரிய பொதுத்துறை வங்கிகளாக உள்ள எஸ்.பி.ஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரசு சார்ந்த நிதி பரிவர்த்தனைகளை செய்யக் கூடாது என்று கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் கர்நாடகாவில் மாநகராட்சி கணக்கு கண்காணிப்பாளராக இருந்த சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை கடிதம்: அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான 187 கோடி ரூபாய் பணம் எந்த அனுமதியும் இன்றி பரிமாற்றம் செய்யப்பட்டது எனவும் அதன்பிறகு மொத்த தொகையில் 88.62 கோடி ரூபாய் பணம் ஐதராபாத்தில் இருந்த ஐடி நிறுவனங்கள் கூட்டுறவு வங்கிகள் உள்பட பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்று கூறியிருந்தார். அதன்பிறகே இந்த வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.
வங்கி அதிகாரிகளின் துணையோடு பல கோடிக்கணக்கான பணம் முறைகேடு செய்யப்பட்டதாகவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பல கோடி பணம் இன்னும் திரும்ப தரப்படவில்லை என்றும் நிதித்துறை குறிப்பிட்டுள்ளது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications