பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில்.. மேலும் 11 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 523 பேராக உயர்வு.. இதுவரை பலி 20

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆனது. இந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 20 பேர் பலியாகிவிட்டனர்.

Karnataka has 11 new corona virus positive cases

கொரோனா வைரஸ் பரவாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி சிக்மங்களூர், ராய்ச்சூர், சித்ரா துர்கா, ஷிமோகா, கோளார், உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதராயனபுரா, ஹொங்கச்சந்திரா ஆகிய பகுதிகளில் ரேண்டமாக பெறப்பட்ட ரத்த மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தன. இதுகுறித்து கோவிட் 19 செய்தித் தொடர்பாளர் சுரேஷ் குமார் கூறுகையில் ப்ரூஹட் பெங்களூரு மஹன்நகரா பகுதிகள் சீலிடப்பட்டுவிட்டது.

5 பேர் குணம்.. இதுவரை 51 பேர் நலம்.. இன்னும் கொஞ்சம் தான்.. அசத்தும் திருச்சி5 பேர் குணம்.. இதுவரை 51 பேர் நலம்.. இன்னும் கொஞ்சம் தான்.. அசத்தும் திருச்சி

எனினும் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிக் கொண்டிருப்பதாக தினமும் புகார்கள் வந்தன. பாதராயனபுராவில் திங்கள்கிழமை இன்ப்ளூயன்சா பாதித்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஹொங்கச்சந்திராவில் 145 பேருக்கும், பாதராயனபுராவில் 70 பேருக்கும் ரேண்டமாக கொரோனா சோதனை செய்தோம். அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகாவில் 4,827 பேருக்கு சோதனை எடுக்கப்பட்டது. அதில் 4,717 பேருக்கு கொரோனா இல்லை என வந்துள்ளது. ஆனால் 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மற்றவர்களின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றார்.

English summary
All the random samples collected from Padarayanapura and Hongasandra have tested negative. The total number of Covid-19 positive cases in Karnataka was 11 on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X