பிரஜ்வல் ரேவண்ணாவின் "அந்த பழக்கம்".. 3,000 ஆபாச வீடியோக்களை லாவகமாக 'லவட்டிய' டிரைவர் கார்த்திக்!
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போனில் இருந்த 3,000 ஆபாச வீடியோக்கள் ஓட்டுநர் கார்த்திக் வசம் எப்படிப் போனது என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
கர்நாடகாவின் ஹாசன் லோக்சபா தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா. தற்போது பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் விவகாரம்தான் கர்நாடகாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களை யார் வெளியிட்டது என்கிற சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வீடியோக்கள் அனைத்துமே ஓட்டுநர் கார்த்திக் மூலமே லீக் ஆகி இருக்கிறது என்பதுதான் உறுதியான ஒன்று. இதனை கார்த்திக்கும் உறுதி செய்துள்ளார். பிரஜ்வல் வீடியோக்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் பாஜகவும் தேவராஜ் கவுடாவும் உறுதி செய்திருக்கிறார். ஆனால் யார் முதலில் வெளியிட்டது என்பதுதான் விவாதமாக நடக்கிறது.
சரி.. ஓட்டுநர் கார்த்திக் எப்படி பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களை 'ஆட்டைய' போட்டார்?.. இங்குதான் சுவாரசியமே இருக்கிறது.
பிரஜ்வல் ரேவண்ணாவிடம் 15 ஆண்டுகள் டிரைவராக இருந்தவர்தான் கார்த்திக் கவுடா. ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். இதனால் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக கார்த்திக் கவுடா இருந்து வந்தார்.
பொதுவாக பிரஜ்வல் ரேவண்ணாவிடம் ஒரு பழக்கம் இருந்து வந்துள்ளது. அதாவது காரில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தைப் போட்டுவிடுவாராம் பிரஜ்வல் ரேவண்ணா. இந்த நேரத்தில்தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போனை எடுத்து 'ஆராய்ச்சி' செய்வது கார்த்திக்கின் பழக்கமாகவும் இருந்திருக்கிறது. இப்படியான 'ஆராய்ச்சி'யில்தான் ஆயிரமாயிரம் ஆபாச படங்கள், பலாத்கார காட்சிகள் என பிரஜ்வல் செல்போன் முழுவதும் நிரம்பிக் கிடந்தது தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் "எதற்கும்" பயன்படுமே என அத்தனையையும் படு 'பாதுகாப்பாக" சில பல பென் டிரைவ்களில் ஏற்றி வைத்துக் கொண்டாராம் டிரைவர் கார்த்திக்.
இந்த தருணத்தில் கார்த்திக் கவுடா- பிரஜ்வல் ரேவண்ணா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. 13 ஏக்கர் நிலத்தை கார்த்திக் கவுடா, போர்ஜரி கையெழுத்து போட்டு 'ஆட்டைய' போட்டுவிட்டார் என்றது பிரஜ்வல் ரேவண்ணா குடும்பம். பிரஜ்வலும் அவரது தாயாரும் சேர்ந்து கார்த்திக் கவுடாவை போட்டு வெளுத்திருக்கின்றனர். இந்த கோபத்தில்தான் கார்த்திக் கவுடா, வேலையை விட்டுப் போயிருக்கிறார்.
பிரஜ்வல் ரேவண்ணா குடும்பத்தினரை பழிவாங்க கார்த்திக் கவுடா சமயம் பார்த்து காத்திருக்க அப்போது சட்டசபை தேர்தலில் ரேவண்ணாவிடம் தோற்ற பாஜகவின் தேவராஜ் கவுடாவை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில்தான் 3,000 ஆபாச வீடியோக்களும் கை மாறி இருக்கின்றன. இப்படித்தான் ஆபாச வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் இந்த வீடியோக்களை முதலில் ரிலீஸ் செய்தது யார் என்பதில்தான் குழப்பம் நீடித்து வருகிறதாம்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications