கணவரின் கல்லீரலை முருங்கை சாம்பார் ஊற்றியே காலி செய்த மனைவி.. பெட்ஷீட்டுடன் வந்து நின்ற கள்ளக்காதலன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: உயிருக்கு உயிராக காதலித்த கணவன், உடல் நலம் பாதிக்கப்பட்டதையறிந்து துடிதுடித்து போனார் மனைவி.. இதனால் கணவரை ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று, அவரது உயிரை காக்க போராடியிருக்கிறார். என்ன நடந்தது தம்பதி விவகாரத்தில்?

நாகையில் கடந்த வருடம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. வேதாரண்யம் சடையன்காடு என்ற பகுதியில் வசித்து வந்த தம்பதி தேவேந்திரன் - சூர்யா.. தேவேந்திரனுக்கு 47 வயது, சூர்யாவுக்கு 26 வயதாகிறது.

nagapattinam liver

மணவாழ்க்கை: தேவேந்திரன் கீழையூர் ஒன்றிய கவுன்சிலர் ஆவார்.. சில தினங்களாகவே தேவேந்திரனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடவும், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துள்ளார்.. அப்போதுதான், மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. இதனால் 10 நாட்கள் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறினார். பிறகு மறுபடியும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

எனவே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தேவேந்திரன் இறந்துவிட்டார். அவசர அவசரமாக இறுதிசடங்கும் நடந்து முடிந்தது. மறுநாளிலிருந்தே மனைவி சூர்யா, கலகலவென காணப்பட்டதுடன், எந்நேரமும் போனில் ஜாலியாகவும் பேசி வந்திருக்கிறார்.. இதைக்கண்டு தேவேந்திரனின் உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சந்தேகம் அடைந்து, சூர்யாவின் செல்போனை ஆய்வு செய்துள்ளார்.

தகாத உறவு: அப்போதுதான், தேவேந்திரன் வீட்டில் 15 வருடமாக வேலை செய்யும் சந்திரசேகரன் என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்தது. சூர்யா குடும்பத்தின் வறுமையை பயன்படுத்தி கட்டாய கல்யாணம் செய்ததால், விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்தநிலையில், சந்திரசேகரனுக்குடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இது தேவேந்திரனுக்கு தெரிந்து சூர்யாவை கண்டித்ததால், தேவேந்திரனை கொலை செய்ய முடிவு கள்ள ஜோடி செய்துள்ளனர்..

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொள்ள முடிவு முடிவு, தினமும் சாம்பாரில் விஷத்தையும் கலந்து ஊற்றியிருக்கிறார் சூர்யா..

கல்லீரல்: ஸ்லோ பாய்சன் உடம்பில் சேர்ந்து, கடைசியில் கல்லீரலை பாதித்துவிட்டது. மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சனை வரை கொண்டு கென்று தேவேந்திரன் உயிர் பறிபோனது தெரியவந்தது. பிறகு இந்த ஜோடி ஜெயிலுக்கு போய்விட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கர்நாடகாவிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

உடுப்பி மாவட்டம், கார்கலாவின் அஜெகாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி.. 44 வயதாகிறது.. இவரது மனைவி பிரதிமா.. 32 வயதாகிறது.. இவர்கள் இருவருமே உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பாலகிருஷ்ணாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வாந்தி, காய்ச்சலால் கடும் அவதிக்கு ஆளானார்..

மஞ்சள் காமாலை: கணவருக்கு மஞ்சள் காமாலை உள்ளதாக கூறி, கார்கலாவின் தனியார் மருத்துவமனையில் பிரதிமா சேர்த்தார்.. ஆனால், அங்கு கணவரை குணப்படுத்த முடியவில்லை.. அதனால், மங்களூரின் வென்லாக் மருத்துவமனை, பெங்களூரின் நிமான்ஸ், விக்டோரியா மருத்துவமனை என ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று, சிகிச்சை தந்தார்.. எனினும் பலனளிக்காமல் கடந்த 20ம் தேதி உயிரிழந்துவிட்டார் பாலகிருஷ்ண பூஜாரி.

எனினும், இவரது இறப்பில் பிரதிமாவின் சகோதரர் சந்தீப்புக்கும், பாலகிருஷ்ண பூஜாரியின் சகோதரர் ராமகிருஷ்ணாவுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அஜெகாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்... போலீசாரும் விசாரணை மேற்கொண்டதில், பிரதிமாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது.. எனவே, தங்கள் பாணி விசாரணையை அவரிடம் மேற்கொண்டனர்.. அப்போதுதான் பிரதிமா, தன்னுடைய கணவரை கொலை செய்தது தெரியவந்தது.

ரீல்ஸ் மோகம்: பிரதிமாவுக்கு ரீல்ஸ் செய்வதில் மிகவும் ஆர்வம் அதிகமாம்.. அதனால், தன்னுடைய கணவரையும் கட்டாயப்படுத்தி, பலவந்தமாக ரீல்ஸ் செய்ய வைத்தார். அப்போது இன்ஸ்டாகிராமில் திலீப் ஹெக்டே என்ற 30 வயது இளைஞர் அறிமுகமானார்.. இது கள்ளத்தொடர்பாக மாறியது..

கணவர் இதனை கண்டிக்கவும், அவரை கொல்ல பிரதிமா முடிவு செய்து, "ஸ்லோ பாய்சன்" கலந்து அவருக்கு கொடுத்து வந்தார். இதனால் அவரது உடல்நலன் வெகுவாக பாதிக்கப்பட்டது.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் கணவரை அழைத்து சென்று நாடகமாடியிருக்கிறார் பிரதிமா.

கள்ளக்காதல் ஜோடி: டாக்டர்கள் கைவிரித்ததும் அதை தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.. பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து, கடந்த 20ம் தேதி, பெட்ஷீட்டால் கணவரின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.. இப்போது இந்த கள்ள ஜோடியும் ஜெயிலில் உள்ளது.

மத்தி மீன் உண்பதால் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் D, வைட்டமின் 12, புரதச்சத்து, நல்ல கொழுப்பு, ஃபோலேட், சத்துக்களும், செலினியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுச்சத்துகளும் உள்ளதால், சத்துக்களுக்கு பஞ்சமில்லை. சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அதிக பாதரசம் கொண்ட மீனும் இதுதான். அதன் அதிக பாதரசம் உடல் ஆரோக்கியத்தை எளிதில் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த மீனை அளவுக்கு அதிகமாக சாப்பிடவே கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.. ஆனால், வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டால் அனைத்து பலன்களையும் பெற முடியும்.

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அந்த கள்ளக்காதலன் பெயர் மூலு திலீப் என்பது தெரியவந்துள்ளது.. இவர, சம்பவத்தன்று வீட்டுக்கு வந்துள்ளார்.. பெட்ஷீட்டை எடுத்து, கணவரின் மீது மனைவி போர்த்தியடுத்து, அவரை சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார் இந்த மூலு திலீப்.. இறுதியில் கழுத்தை நெரித்தும் கொன்றது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த ஜோடியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+