அர்த்தராத்திரியில்.. மண்வெட்டியுடன் நின்ற கணவர்.. தூங்கி கொண்டிருந்த ரேஷ்மா ஒரே கதறல்.. அடக்கடவுளே
பெங்களூரு: தூங்கி கொண்டிருந்த இளம்பெண் துடிதுடித்து இறந்துபோன சம்பவம் கர்நாடக மாநிலத்தையே உறைய வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம், உபனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா.. இவரது கணவர் பெயர் அசோக்.. 33 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். இவர்களுக்கு கல்யாணம் ஆகி 11 வருஷங்கள் ஆகின்றன.. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

மதுப்பழக்கம்: அசோக், தினமும் தண்ணி அடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவாராம்.. இந்த மதுப்பழக்கத்தை கைவிடும்படி ரேஷ்மா பலமுறை சொல்லியும் அசோக் கேட்கவில்லை.. நாளுக்கு நாள் குடித்துவிட்டு அளவுக்கு அதிகமாக அட்டகாசம் செய்து வந்துள்ளார் அசோக்.. ஒருகட்டத்தில் ரேஷ்மாவை அடித்து கொடுமைப்படுத்தவும் செய்துள்ளார். போதாக்குறைக்கு, ரேஷ்மா மீது சந்தேக புத்தியும் அசோக்குக்கு வந்துவிட்டது.
இதனால் தினமும் வீட்டிற்குள் தகராறு வெடித்தது.. யாருடனோ ரேஷ்மா முறைகேடான உறவு வைத்திருப்பதாக கூறி, சொல்லி சொல்லி ரேஷ்மாவை கொடூரமாக தாக்குவாராம் அசோக்.
மாமியார்: நாளுக்கு நாள் அசோக் டார்ச்சர் அதிகமாகிவிடவும், ஹூபனூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு ரேஷ்மா சென்றுவிட்டாராம்.. எனவே, அசோக் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்று, ரேஷ்மாவை சமாதானப்படுத்தி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.. வழக்கம்போல், ரேஷ்மாவிடம் தகராறு செய்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காத அசோக் மறுபடியும் குடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. அங்கே தூங்கி கொண்டிருந்த ரேஷ்மாவை மண்வெட்டியாலேயே சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில், துடிதுடித்து உயிரிழந்தார் ரேஷ்மா.
பரிதாபம் : கண்ணெதிரே ரேஷ்மா உயிரிழந்ததை பார்த்ததுமே, அசோக் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். ஆனால், அதற்குள் அக்கம்பக்கத்தினர் உடனடியாக திக்கோடு புறநகர் போலீசாருக்கு தகவல் தந்தார்கள்..
போலீசாரும் விரைந்து சென்று, ரேஷ்மாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. எந்நேரமும் வீட்டில் தகராறு நடந்து கொண்டேயிருக்கும் என்றும், நேற்றிரவும் தம்பதிக்குள் சண்டை வந்ததாகவும் அக்கம்பக்கதினர் போலீசில் தெரிவித்தனர்..
தலைமறைவு: இதையடுத்து, போலீசார் சம்பவம் குறித்துவழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அசோக் எங்கே என தெரியவில்லை.. தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளதால், அவரை வலைவீசி தேடிவருகின்றனர். தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல், 3 குழந்தைகளும் கதறி அழுது கொண்டிருக்கின்றன.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications