"உக்கிர" தமிழ்நாடு! திடுதிப்பென வினாடிக்கு 7,973 கன அடி காவிரி நீரை திறந்துவிட்ட கர்நாடகா-பாஜக ஷாக்!
பெங்களூர்: காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 7,973 கன அடி நீரை கர்நாடகா திடீரென திறந்துவிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகள் கட்டியதால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோனது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகாவிடம் கெஞ்சிப் பெறும் நிலைதான் உள்ளது.

தூண்டிவிட்ட பாஜக: காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் கர்நாடகா மாநில பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள அரசுகள் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தருவதற்காக கன்னட விவசாய அமைப்புகள், கன்ன அமைப்புகளை தூண்டிவிட்டன. தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரையும் தரக் கூடாது என மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. மண்டியாவில் ஒன்றரை மாதங்களாக நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்படுவதால் காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை தர கர்நாடகா மறுத்து சொற்ப நீரை திறந்துவிட்டது.
தமிழ்நாடு சட்டசபை தீர்மானம்: இதனிடையே தமிழ்நாடு சட்டசபையில் காவிரி பிரச்சனையை முன்வைத்து மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் கர்நாடகா அரசு அதிரடியாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூடுதல் நீர் திறப்பு: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தடுத்து வைத்துள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து மொத்தம் 7,973 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு நேற்று கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் வினாடிக்கு 4,719 கன அடிநீரைத்தான் கர்நாடகா திறந்தது. தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,973, கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
அணைகள் நீர் வரத்து: கடந்த வாரம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடிக்கும் குறைவான நீரை கர்நாடகா திறந்துவிட்டது. தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 3,503 கன அடிநீர் வரத்து உள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 1,261 கன அடிநீர் வரத்து உள்ளது.
கேஆர்எஸ் அணை நீர் மட்டம்: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போது அணையின் நீர் மட்டம் 101.22 அடியாக உள்ளது. கபினி அணை நீர்மட்டம் 57.51 அடியாக உள்ளது. காவிரி நீர் வந்து சேரும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணை நீர் மட்டம் வெறும் 31.3 அடிதான் உள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications