பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: கர்நாடகா குமாரசாமி ஜேடிஎஸ் உடைகிறதா? காங்கிரஸுக்கு எம்எல்ஏக்கள் தாவல்?
பெங்களூர்: பாஜகவுடன் ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) கூட்டணி அமைத்ததை எதிர்த்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு தாவ இருப்பதாக வெளியானா செய்திகளை முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம், தேவ கவுடாவால் தொடங்கப்பட்டது. அவருக்கு பின் மகன் குமாரசாமி, அவருக்கு தடுத்ததாக நிகில் கவுடா என பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸுன் கூட்டணி, 2021 சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை, 2024-ல் பாஜகவுடன் கூட்டணி என மாறி மாறி அணிகள் தாவிக் கொண்டிருக்கிறது ஜேடிஎஸ். டெல்லிக்கு மகனுடன் சென்ற குமாரசாமி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடிஎஸ் இடம்பெறுவதை உறுதி செய்திருந்தார்.
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம்பெறுவதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்து வந்தனர். மேலும் சில எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுக்கு தாவப் போவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், காங்கிரஸ் கட்சியினர்தான் இப்படி கிளப்பி விடுகின்றனர். மதச்சார்பற்ற கட்சியின் எம்.எல்.ஏக்களை வளைக்கப் பார்க்கிறது காங்கிரஸ். கடந்த 2 மாதங்களாக இதே வேலையாகத்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. கூட காங்கிரஸ் கட்சிக்கு போகமாட்டார்கள் என்றார்.
மேலும் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிற கருத்து பற்றி பேசிய குமாரசாமி, மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என யாராவது நினைத்துப் பார்த்தார்களா? தற்போதைய நிலையில் அப்படி ஒரு நிலைமையோ ஆபரேஷனோ எதுவுமே இல்லை. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பிரதமர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, முதல்வர் பதவி என அத்தனையையும் பார்த்துவிட்டோம். நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் அல்ல என்றார்.
அதேபோல, முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கியவர் தேவகவுடா. ஆனால் முஸ்லிம்கள் எங்களுக்கு திருப்பி என்ன செய்தார்கள்? காலந்தோறும் எங்களை ஒதுக்கிதான் முஸ்லிம்கள் வைத்துள்ளனர். ஆகையால் முஸ்லிம்களைப் பற்றி எங்களுக்கு கவலை எதுவும் இல்லை என்றார் குமாரசாமி.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications