வரிப் பங்கீட்டில் வஞ்சகம்: தமிழகம் போலவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பும் கர்நாடகா!
பெங்களூர்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுகிறது; தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான மொத்த வரிப் பகிர்வை விட எப்போதும் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கூடுதல் வரிப் பங்கீடு செய்கிறது என்பது தமிழ்நாட்டின் கலகக் குரலாக இருந்து வருகிறது. தற்போது கர்நாடகா மாநில அரசும் மத்திய பாஜக அரசின் வரிப் பங்கீட்டு வஞ்சகத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருக்கிறது.
மத்திய அரசு அண்மையில் வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது. 2024 அக்டோபரில் வழங்கவேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக முன்கூட்டிய தவணையான ரூ. 89,086.50 கோடியும் இதில் அடங்கும்; தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.

இந்த வரிப் பங்கீட்டில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் அதிகமான வரிப் பகிர்வாக ரூ31,962 கோடி விடுவித்திருந்தது மத்திய அரசு. தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிப் பகிர்வின் மொத்த தொகையையும் விடவும் இது மிகவும் கூடுதலானது.
தென் மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு: ஆந்திரா -ரூ. 7,211 கோடி கர்நாடகா - ரூ. 6,498 கோடி தமிழ்நாடு- ரூ. 7,268 கோடி தெலுங்கானா- ரூ. 3,745 கோடி கேரளா ரூ. 3,430 கோடி என தெரிவித்திருந்தது மத்திய அரசு. 5 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமான வரிப் பகிர்வு ரூ.28,152 கோடிதான். இந்த தொகையை விட கூடுதலாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் வழங்கி இருந்தது மத்திய பாஜக அரசு.
மத்திய பாஜக அரசின் இந்த வரிப் பங்கீட்டு வஞ்சகத்துக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதேபோல கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் இந்த ஓரவஞ்சனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். பெலகாவியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, என்னை பதவி விலக வேண்டும் என சொல்கிறது பாஜக. ஆனால் கர்நாடகா மாநிலத்துக்கு வெறும் ரூ6,498 கோடியைத்தான் மத்திய பாஜக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் 5 மடங்கு கூடுதலாக வரிப் பங்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி பாஜகவினர் ஏன் வாய் திறப்பது இல்லை எனவும் சித்தராமையா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications