லோக்சபா தேர்தல்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அபாரம்! ஜேடிஎஸ் தயவால் 'கவுரவமாக' தப்பிய பாஜக!
பெங்களூர்: கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் 9 இடங்களைக் கைப்பற்றி இருப்பதுடன் வாக்கு சதவீதம் 13% உயர்ந்திருப்பது பாஜகவின் 'அசைக்கவே' முடியாது என்ற நம்பிக்கைக்கு வேட்டு வைத்திருக்கிறது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகிய 3 கட்சிகள்தான் களத்தில் உள்ளன.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனித்தும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. பாஜக 27 இடங்களில் போட்டியிட்டது. சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதாவை மண்டியாவில் ஆதரித்தது. காங்கிரஸ் 21; ஜேடிஎஸ் 7 இடங்களில் போட்டியிட்டன.
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்- கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
பாஜக - 25 (51.75%)
காங்கிரஸ் 1 (32.11 %)
ஜேடிஎஸ் 1 (9.74%)
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவும் ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் இம்முறை தனித்துப் போட்டியிட்டது. பாஜக 25 இடங்களிலும் ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டன.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள்- கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
பாஜக - 17 (46.06%)
காங்கிரஸ் 9 (45.43%)
ஜேடிஎஸ் 2 (5.60%)
என்ன நடந்தது? 2019-ல் 25 இடங்களில் வென்ற பாஜக தற்போதைய தேர்தலில் 8 இடங்களை இழந்து 17-ல் தான் வென்றுள்ளது. ஜேடிஎஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மண்டியா, கோலார், ஹாசனில் மண்டியா- கோலாரில் மட்டும் வென்றது. ஹாசனில், ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியைத் தழுவினார்.
கட்சிகளின் வாக்கு சதவீதம்: 2019-ம் ஆண்டு தேர்தலில் 51.75% வாக்குகளைப் பெற்ற பாஜகவின் வாக்கு சதவீதம் இம்முறை 46.06% ஆக சரிந்துள்ளது. அதே நேரத்தில் 2019-ல் 32.11% பெற்ற காங்கிரஸின் வாக்கு சதவீதம் 45.43% ஆக அதாவது 13% உயர்ந்துள்ளது. 2019-ல் 7 இடங்களில் போட்டியிட்டு 9.74% வாக்குகளைப் பெற்ற ஜேடிஎஸ் இம்முறை 3 இடங்களில் போட்டியிட்டு 5.6% வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
சட்டசபை தேர்தலுடன் ஒப்பீடு: கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 42.88% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது அதை விட 3% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது காங்கிரஸ். பாஜகவை எடுத்துக் கொண்டால் கடந்த சட்டசபை தேர்தலில் 36% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது 10% கூடுதலாகப் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு ஜேடிஎஸ் வாக்குகள்: 2019-ம் ஆண்டு காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணியில் இரு கட்சிகளின் வாக்குகளும் பரஸ்பரம் இன்னொரு கட்சிக்கு கிடைக்காமல் போனதால் தோல்வியைத் தழுவியது. ஆனால் இம்முறை ஜேடிஎஸ்- பாஜக இரு கட்சிகளின் வாக்குகளும் பரஸ்பரம் இரு கட்சிகளுக்கும் கிடைத்திருக்கின்றன என்பதையே புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
காப்பாற்றிய ஜேடிஎஸ்: தென் கர்நாடகாவில் அதாவது சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவை வாரி வழங்கிய ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகள் லோக்சபா தேர்தலில் பாஜக- ஜேடிஎஸ் கூட்டணிக்கு சாதகமாக கிடைத்திருக்கிறது. அதாவது ஜேடிஎஸ் கட்சியுடனான கூட்டணிதான் கர்நாடகாவில் இம்முறை பாஜகவுக்கு கவுரவமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. ஜேடிஎஸ் கட்சி இல்லாமல் பாஜக தனித்து களம் கண்டிருந்தால் காங்கிரஸ் டபுள் டிஜிட் இடங்கள் என்ன? பாஜகவை விட அதிகமான இடங்களைக் கைப்பற்றி இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications