கர்நாடகா: 32 வயது மைசூர் மகாராஜா, 33 வயது தேஜஸ்வி சூர்யா முதல் 73 வயது சோமண்ணா வரை.. விஐபிகள் யார்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா லோக்சபா தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பாஜக வேட்பாளராக 32 வயதாகும் மைசூர் மகாராஜா யதுவீர் உடையார் தொடங்கி 73 வயதாகும் சோமண்ணா வரை பல விஐபிகள் களம் காண்கின்றனர்.

கர்நாடகாவில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 14 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவின் இரு பெரும் ஜாதிகளில் ஒன்றாக ஒக்கலிகா கவுடா (வொக்கலிகா) அதிகமாக இருக்கும் தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Karnataka Lok Sabha Election 2024 Do You Know VIP candidates constituencies

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், பாஜக- ஜேடிஎஸ் கூட்டணி இடையேதான் போட்டி. கர்நாடகா முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் சில விஐபி வேட்பாளர்களை பார்க்கலாம்.

குமாரசாமி: கர்நாடகா முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) கட்சித் தலைவருமான குமாரசாமி லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். 65 வயதாகும் குமாரசாமி, கர்நாடகா மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்தவர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். மண்டியாவில் குமாரசாமியை எதிர்த்து வெங்கடராமே கவுடா என்ற ஸ்டார் சந்துரு காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். பெங்களூர் தொழிலதிபர் இவர்.

பிரஜ்வல் ரேவண்ணா: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா எம்.எல்.சி.யாக உள்ளார். ஆஸ்திரேலியிவில் எம்.டெக் படிப்பை நிறுத்தி விட்டு 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அத்தேர்தலில் 676,606 வாக்குகள் பெற்ற பிரஜ்வல் இந்த முறை பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசனில் மீண்டும் களம் காண்கிறார். 1998, 2014-ல் தாத்தா தேவகவுடா வென்ற தொகுதி. இதே தொகுதியில் 1999-ல் தேவகவுடா தோல்வியடைந்திருந்தார். இத்தொகுதியில் 32 வயதாகும் ஸ்ரேயாஸ் பட்டேல், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 2023 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். பிபிஎம் பட்டதாரி ஸ்ரேயாஸ் பட்டேல்.

யதுவீர் உடையார்: மைசூர் மகாராஜாவான 32 வயது யதுவீர் உடையார் பாஜகவின் வேட்பாளராக மைசூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜனநாயக திருவிழாவான தேர்தலிலும் களம் காண்கிறார். மைசூர் லோக்சபா தொகுதியில் 2019-ல் பாஜக 52.2% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 41.8% வாக்குகள் கிடைத்தது. ஆனால் 2023 சட்டசபை தேர்தலில் மைசூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 8 தொகுதிகளில் 5-ல் காங்கிரஸ் வென்றது; ஜேடிஎஸ் 2 இடங்களிலும் பாஜகவுக்கு ஒரு இடம்தான் கிடைத்தது. மகாராஜா யதுவீர உடையாரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் லட்சுமண் போட்டியிடுகிறார்.

சோமண்ணா: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் 73 வயதாகும் சோமண்ணா. 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சாம்ராஜ் நகர், வருணா தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வருணா தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். தற்போது தும்கூரு லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். தும்கூருவில் 2014-ல் வென்ற காங்கிரஸ் கட்சியின் முத்தஹனுமே கவுடா மீண்டும் களம் காண்கிறார்.

பால்ராஜ்: தமிழக எல்லையான கொள்ளேகால் சட்டசபையில் 2004-ல் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர். பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 2023-ல் காங்கிரஸ் பால்ராஜுக்கு போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜகவுக்கு ஓடிப் போனார். தற்போது சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் பால்ராஜ். சாம்ராஜ்நகரில் கர்நாடகா அமைச்சர் மகாதேவப்பாவின் மகன் சுனில் போஸ், காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் சுனில் போஸ்.

டிகே சுரேஷ்: பெங்களூர் புறநகர் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வென்றவர் டிகே சுரேஷ். தற்போதைய துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரர். தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடாக வேண்டும் என பேசி மிகப் பெரிய பிரளயத்தையே உருவாக்கியவர் டிகே சுரேஷ். தற்போது காங்கிரஸ் வேட்பாளராக பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதியில் களமிறங்கி உள்ள டிகே சுரேஷை எதிர்த்து பாஜக வேட்பாளராக இதய அறுவை சிகிச்சை வல்லுநர் டாக்டர் மஞ்சுநாத் களம் காண்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன்.

ஷோபா கரந்தலாஜே: மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, உடுப்பி-சிக்கமகளூர் சிட்டிங் எம்பி. ஆனால் அத்தொகுதியில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் பெங்களூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். இத்தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர், ராஜ்யசபா மாஜி எம்பி ராஜீவ் கவுடா போட்டியிடுகிறார்.

பிசி மோகன்: பெங்களூர் மத்திய தொகுதியில் 3 முறை வென்றவர். தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள பிசி மோகனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாஜி அமைச்சர், ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் ரகுமான் மகன் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

தேஜஸ்வி சூர்யா: பாஜகவின் கர்நாடகா இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா வயது 33. பெங்களூர் தெற்கு தொகுதி சிட்டிங் எம்பி. இதே தொகுதியில் தேஜஸ்வி சூர்யா மீண்டும் களம் காண்கிறார். தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிராக கர்நாடகா அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் 40 வயதாகும் சவுமியா ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். 2023 சட்டசபை தேர்தலில் ஜெயநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சவுமியா ரெட்டி.

பிரிஜேஷ் கவுடா: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் அல்லது ஜெய்சங்கர் போட்டியிடக் கூடும் என கூறப்பட்ட தட்சிண கன்னடா தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரிஜேஷ் கவுடா போட்டியிடுகிறார். ராணுவ அதிகாரியான கேப்டன் பிரிஜேஷ் கவுடா வயது 42. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பத்மராஜ் போட்டியிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+