காளிக்கு ரத்த பூஜை.. பிரதமர் மோடி பிரதமராக விபரீத முடிவு.. இளைஞரின் விரலே துண்டான பரிதாபம்
பெங்களூர்: நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக காளி தெய்வத்துக்கு விரலை சீவி ரத்த பூஜை மேற்கொண்டபோது முழு விரலையும் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஜுன் 1ம் தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சுகளில் சிறப்பு ஆராதனை, மசூதியில் சிறப்பு தொழுகைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கையை வெட்டி காளிக்கு பூஜை செய்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் அருகிலுள்ள சோனார்வாடேவை சேர்ந்தவர் அருண் வெர்னேகர் ( வயது 29). நகைக்கடை நடத்தி வருகிறார்.
பாஜகவுக்கு ஷாக்.. கர்நாடகாவில் 11-13 இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு - உளவுத்துறை அறிக்கை
பாஜகவை சேர்ந்த இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். மோடியின் ஆதரவாளர் என்றால் சாதாரணமானவர் இல்லை. கடந்த 2014ல் மோடியை பிரதமராக்க வேண்டும் என கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பினார். அதன்பிறகு கடந்த 2020ம் ஆண்டில் அருண் வெர்னேகர் தனது வீட்டில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டினார். அதாவது பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை வைத்து கோவில் கட்டி வழிப்பட்டு வருகிறார். அதோடு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்தையும் அங்கு வைத்து பூஜை நடத்துகிறார். இந்நிலையில் தான் மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும் என தனது விரலை வெட்டி ரத்த பூஜை செய்துள்ளார்.

அதாவது காளி தெய்வத்தின் முன்பு தனது இடது கையின் ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியை வெட்டி அதில் வடியும் ரத்தத்தை வைத்து காளி தெய்வத்துக்கு ரத்த பூஜை செய்ய முடிவு செய்தார். ஆனால் எதிர்பாராத விதமாக விரலின் முன் பகுதியை முழுவதுமாக வெட்டிக்கொண்டார். இதனால் விரல் துண்டாகிப்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் துண்டான விரலை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். விரலை மீண்டும் ஒட்ட வைக்க அவர் கூறினார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது விரலை மீண்டும் இணைக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.
மனைவியை விட ரூ.100 கோடி குறைவு.. கர்நாடகா மாஜி முதல்வர் எச்டி குமாரசாமியின் சொத்து மதிப்பு இதுதான்
இதனால் வருத்தம் அடைந்துள்ள அருண் வெர்னேகர், "என் விரலில் இருந்து நான் சிறிதளவு ரத்தம் சேகரிக்க முயன்றேன். ஆனால் நான் நினைத்ததை விட அதிகமாக விரலை வெட்டிக் கொண்டேன். அந்த விரலை மோடி பிரதமராக, காளிக்கு பலி கொடுத்ததாக நினைத்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications