செல்பி எடுக்க கூப்பிட்டு.. கணவனை ஆற்றில் தள்ளிய பாசக்கார மனைவி! கர்நாடகாவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: திருமணமான ஓரிரு நாட்களிலேயே புது மாப்பிள்ளைகள் மனைவிகளால் கொலை செய்யப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இதே போன்ற கொலை முயற்சி ஒன்று நடந்திருக்கிறது. இதில் கணவன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கிறார்.

இந்த சம்பவம் யாத்கிரி மாவட்டம் கிருஷ்ணா நதியின் பாலத்தில் நடந்திருக்கிறது. புதுமன தம்பதியர் பைக்கை வாகனத்தை நிறுத்தி செல்பி எடுக்க முயன்றபோது, கணவர் ஆற்றில் விழுந்திருக்கிறார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் உயிர் பிழைத்த அவர், மனைவி தன்னை தள்ளிவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Karnataka crime police

கணவர் கூறுகையில், "மனைவி குர்ஜாபூர் தடுப்பணையில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள். பாலத்தின் ஓரத்தில் நின்றபோது, என்னை ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றாள். நான் பாறையைப் பிடித்து உதவி கேட்டு கூச்சலிட்டேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் மனைவி, கணவரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மட்டுமல்லாது மனைவி, பாலத்தின் நடுவே நின்று பார்வையாளர்களிடம் இருந்து உதவி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆற்றில் விழுந்த கணவர், பாறையைப் பிடித்து உதவி கேட்டு கூச்சலிட்டிருக்கிறார். உள்ளூர்வாசிகள் கயிறு வீசி அவரை மீட்க முயன்றனர். கயிற்றைப் பிடித்த அவர் பாலத்தை நோக்கி நீந்தினார். அதற்குள் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் வந்திருக்கின்றனர். அவர்கள் கணவனை மேலே இழுத்து பாதுகாப்பாக மீட்டனர்.

சம்பவத்தின் வீடியோவில் மனைவி உதவி கேட்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கப்படவில்லை.

சமீபக நாட்ளாக புதியதாக திருமணம் ஆனவர்கள், ஹனிமூன் போகும்போது கணவன், மனைவியால் கொல்லப்படும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காண முடிகிறது.

இதற்கான சமீபத்திய உதாரணம்தான் மேகாலயா மாநிலத்தில் நடந்த ஹனிமூன் கொலை. ராஜா ரகுவன்சி என்கிற தொழிலதிபருக்கும், சோனம் எனும் இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்திருக்கிறது. இதனையடுத்து ஜூன் மாதம் இவர்கள் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றிருக்கின்றனர். சில நாட்கள் கழித்து அவர்கள் சொந்த ஊர் திரும்ப இருந்தனர். ஆனால் அவர்களை காணவில்லை. மொபைல் மூலமாகவும் அவர்களை ரீச் செய்ய முடியவில்லை.

எனவே, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் ராஜா சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை வழக்கில் அடுத்தடுத்த கைதுகள் நடந்த நிலையில், மனைவி சோனம் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

தன்னுடைய காதலை மறைத்த வீட்டில் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணம் பிடிக்காததால் காதலுடன் சேர்ந்து கணவனை கொன்றதாகவும் அவர் வாக்கு மூலம் கொடுத்திருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+