"இருந்தாலும் ரொம்ப தைரியம்" நள்ளிரவில் மாமனார் வீட்டிற்கு போக பஸ் இல்லை! போலீசுக்கு போன் செய்த நபர்
பெங்களூர்: பெங்களூரில் மாமனார் வீட்டில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக சென்றபோது பஸ்கள் ஏதும் பஸ் ஸ்டாண்டில் இல்லாததால் தவித்த நபர் போலீசுக்கு போன் செய்து அழைத்துள்ளார். அங்கு வந்த போலீசாரிடம் 'ப்ளீஸ் சார்.. உங்களது ஜீப்பில் என்னை என் மாமனார் வீட்டில் கொண்டு விட்டிவிடுங்கள் என்று கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.
இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது ஊருக்கு போக பஸ் இல்லை என்றால், ராத்திரி முழுவதும் பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து உறங்கிவிட்டு அதிகாலையில் வரும் முதல் பஸ்சை பிடித்து ஊருக்கு செல்வார்கள். இதனை தினம் தோறும் பஸ் ஸ்டாண்ட்களில் பார்க்கலாம்.. ஒரு சிலரோ பஸ் இல்லையென்றால் நண்பர்களுக்கு போன் பண்ணி அவரது வாகனத்தில் போவார்கள்..

இன்னும் சிலரோ அவ்வழியாக செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்வார்கள்.. ஆனால், மாமனார் வீட்டிற்கு போக வண்டி இல்லை என்பதால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு போலீஸ் ஜீப்பில் கொண்டு விடுமாறு கேட்டுள்ளார் ஒருவர்... இந்த விசித்திர சம்பவம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முடிகெரெயின் தருவெ என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது மாமனார் வீட்டில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு செல்வதற்காக இரவில் பேருந்து நிலையம் வந்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் வந்து பார்த்தவருக்கு ஒரு பஸ் கூட இல்லாமல் இருந்ததால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
மாமனார் வீடாச்சே.. எப்படியாவது சிறப்பு பூஜையில் பங்கேற்க வேண்டுமே என நினைத்துக்கொண்டு ஏதேனும் பஸ்கள் வருகிறதா என ரோட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். கடைசி வரை ஒரு பஸ் கூட வரவில்லையாம்.. இதனால், ஏமாற்றம் அடைந்த அசோக்கிற்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. சற்றும் யோசிக்காமல், காவல்துறையின் எமெர்ஜென்சி எண்ணான 112-க்கு போன் போட்டு இங்கே ஒரே சண்டையாக இருக்கிறது. உடனே வாங்க என சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டாராம்..
போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து என்ன பிரச்சினை.. எங்கே சண்டை நடக்கிறது என அசோக்கிடம் கேட்டு இருக்கிறார்கள். அப்போதுதான் வெள்ளந்தியாய் பேசத்தொடங்கிய அசோக்... மாமனார் வீட்டில் சிறப்பு பூஜைக்கு வர சொன்னார்கள்.. குடும்பத்தினர் அனைவரும் காலையிலேயே போய் விட்டார்கள். நான் வேலை முடிந்து போகலாம் என வந்தேன். ஆனால், பஸ்டாண்ட் வந்த பிறகுதான் இங்கே ஒரு பஸ் கூட இல்லை என்பது தெரிந்தது.
இதனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.. என்னை மன்னித்து விடுங்கள்.. மழையும் பெய்ய தொடங்கிவிட்டது. என்னை உங்கள் ஜீப்பில் கொண்டு போய் பால்குனி கிராமத்தில் இருக்கும் எனது மாமனார் வீட்டில் இறக்கி விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சியுள்ளார். இதனைக் கேட்ட போலீசாருக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி போனது.
என்னவோ.. ஏதோ என ஓடி வந்தால்.. இப்படி ஒரு பிரச்சினையா? என நினைத்துக் கொண்ட போலீசார்.. அசோக்கை பிடித்து எச்சரித்தனர். இது காவல்துறையின் வாகனம், சமூக சேவை, அரசு பணி செய்வதற்காக தான் உன்னை ஜீப்பில் அழைத்து செல்ல முடியாது எனக் கூறி, அந்த வழியாக சென்ற லாரியில் ஏற்றி அசோக்கை அனுப்பி வைத்தனர்.
-
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications