"மீன் விற்கும் தாய் முகம் பார்க்கவே.." துபாயிலிருந்து மகன் சர்ப்ரைஸ் விசிட்! நெகிழ்ந்த அம்மா..வீடியோ
பெங்களூர்: கர்நாடக மாநிலம் உடுப்பியில் துபாயில் வேலை பார்த்து வந்த கார்த்தி என்ற இளைஞர் தனது தாயாருக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சம்பவம் இணையதளத்தில் நெட்டிசன்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அம்மா இந்த சொல்தான் உலகிலேயே மதிப்பு மிக்க சொல்.. தன்னலம் இல்லாத தாய்ப்பாசத்தை மிஞ்சியது இந்த உலகில் எதுவுமே இல்லை... வெளியூர்களுக்கு வேலை சென்றாலும் வீட்டைப் பற்றியோ.. அம்மாவை பற்றியோ நினைக்காமல் அந்த நாள் எந்த ஒரு பேச்சுலர்களுக்கும் கடந்து விடாது. அதுவும் சொந்த ஊர் செல்லப்போகிறோம் என்றால் அதன் மகிழ்ச்சியே அலாதி பிரியமானது.

மகனோ... மகளோ வீட்டிற்கு வரப்போகிறார் என்றால் வீட்டிலும் வரவேற்பதற்காகவும் இரண்டு மூன்று நாட்கள் முன்பே நாட்களை எதிர்பார்த்துக்கொண்டு அம்மாவும் காத்துக்கொண்டு இருப்பார்... சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. துபாயில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் ஒருவர் தனது ஊருக்கு திரும்பும் போது தாயாருக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல், சர்ப்பிரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.
திடீரென மகனை பார்த்த தாயாரோ.. திகைத்து நின்று ஒரு நிமிடம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த ரோகித் என்பவர் தனது வீட்டிற்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் திடீரென சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது தாய் சாலையோரத்தில் மீன் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், திடீரென ஊருக்கு வந்த மகன், சாலையோர கடையில் மீன் விற்பனை செய்து வரும் அம்மாவிடம், ஒரு வாடிக்கையாளர் போல போய் அவரிடம் மீன்கள் கேட்கிறார். தனது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை கைக்குட்டையால் மூடியபடி மீன்களை கேட்டு வாங்குகிறார். ரோகித்தின் தாயாரும் முதலில் வந்து இருப்பது தனது மகன் என தெரியாமல், மீன்களை கவரில் போட்டு கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
துபாயில் பணிபுரிந்து சில வருடங்கள் கழித்து ஊர் திரும்பிய மகன்,
— Kᴀʙᴇᴇʀ - ஆட்டோ கபீர் (@Autokabeer) September 22, 2023
மீன் விற்கும் தன் தாயிடம் முகத்தை மறைத்து மீன் வாங்குவது போல நடிக்கிறார்.
குழந்தையின் ஒவ்வொரு உணர்வையும் புரிந்து கருவில் சுமந்த தாயிக்கு தன் மகனை தெரியாதா.? குரலை வைத்து கண்டுபிடித்துவிட்டாள். 💖
இடம் : கர்நாடக… pic.twitter.com/T4WXUqaLi1
சிறிது நேரத்தில் தனது வந்து இருப்பது தனது மகன் தான் என்பதை அறிந்து கொண்ட ரோகித்தின் தாயார்.. அடுத்த நொடியே மகனை கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறார். மகனை பார்தததும் மகிழ்ச்சியில் தாயார் அகம் மகிழ்ந்தது இணையதளத்தில் நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடையச்செய்யும் வகையில் உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் தாயின் எல்லையில்லா அன்பு குறித்தும் மனமகிழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications