‛‛அயோக்கியன்’’.. அண்ணாமலைக்கு மானம், மரியாதை இருக்கா? கண்சிவந்த கர்நாடகா அமைச்சர் மது பங்காரப்பா
பெங்களூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அயோக்கியன் என்று கர்நாடகா பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் மது பங்காரப்பா. கர்நாடகா முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகனான மது பங்காரப்பா சிவமொக்கா மாவட்டம் சொரபா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இவரது உடன் பிறந்த அக்காவும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் சிவமொக்கா லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவர் சிவமொக்கா தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சிவமொக்கா லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளரான, எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் மது பங்காரப்பாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியையும், அண்ணாமலை தாக்கி பேசியிருந்தார்.
இதற்கிடையே தான் கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதுபற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார். அண்ணாமலையை பற்றி பேசும்போது அயோக்கியன் என்று அவர் கடும் வார்த்தையை பயன்படுத்தினார். இதுதொடர்பாக மது பங்காரப்பா கூறியதாவது:
தேர்தல் சமயத்தில் எனது கல்வி பற்றிய விவாதம் கிளம்பியது. நானும் படிக்கும்போது ஃபெயில் ஆகி இருக்கிறேன். ஆசிரியர்கள், உதவியாளர்கள், பெற்றோர் உதவியுடன் தான் நான் இப்போது உங்கள் முன்பு இருக்கிறேன். என்னை பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அண்ணாமலை ஒரு அயோக்கியன். அவரை அயோக்கியன் என்று தான் கூற வேண்டும்.
நம் மாநிலத்தில் இருந்து ஓய்வூதியம் பெற்று கொண்டு அங்கு (தமிழகம்)அரசியல் செய்து இங்கு வந்து அவதூறாக பேசுகிறார்.
அவருக்கு மானம், மரியாதை இருக்கிறதா?. அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. இந்த துறையில் சில குளறுபடிகள் உள்ளது. அதனை சரிசெய்து கொள்கிறோம். இதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் உதவியை பெற வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு முன்பு பள்ளி கல்வித்துறையில் ரூ.500 கோடி கடனை நாங்கள் அடைத்துள்ளோம்'' என்றார்.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை இதற்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு தான் பாஜகவில் இணைந்து தமிழக தலைவரானார். இந்நிலையில் தான் கர்நாடகா அரசின் ஓய்வூதியத்தை பெற்று கொண்டு அவர் தன்னை விமர்சனம் செய்துள்ளதாக மது பங்காரப்பா சாடியுள்ளார்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications