"ஆதார் இல்லை!" கர்நாடகாவில் தாய்,சிசு பலியான விவகாரம்! டாக்டரை தண்டிக்க புதிய சட்டம்! அமைச்சர் உறுதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் கர்ப்பிணி தமிழ் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து அம்மாநில மருத்துவத் துறை அமைச்சர் சுதாகர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகா மாநிலம் துமகூருவில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி. 30 வயதான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

நிறைமாத கர்ப்பிணியான கஸ்தூரிக்குக் கடந்த புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

ஆதார் இல்லை

ஆதார் இல்லை

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கஸ்தூரியை முதலில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து இருக்க வேண்டும். ஆனால், அவரது ஆதார் கார்டு வேண்டும் என பணியில் இருந்த மருத்துவர் கேட்டுள்ளார். வரும் அவசரத்தில் ஆதார் கார்டை மறந்துவிட்டு வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் வேறு வழியின்றி அவர்களும் திரும்பிவிட்டனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே கஸ்தூரிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இருப்பினும், ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே கஸ்தூரியும் பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று உயிர்களையும் எளிதாகக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், ஆதார் கார்டு வேண்டும் என மருத்துவர் அனுமதிக்க மறுத்ததே மூவரின் உயிர் பறிபோகக் காரணம் எனப் பலரும் சாடினர்

சட்ட திருத்தம்

சட்ட திருத்தம்

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அலட்சியமாகச் செயல்பட்டதாக மூன்று பெண் செவிலியர்கள் மற்றும் ஒரு டாக்டரை சஸ்பெண்ட் செய்து கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் மாநில அரசு தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் என்றும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மக்களிடம் தவறாக நடந்து கொள்ளக் கூடாது. அப்படி தவறாக நடந்து கொண்டால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இது தொடர்பாக முதல்வரிடம் பேச உள்ளேன்.. தேவைப்பட்டால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

செலவை அரசே ஏற்கும்

செலவை அரசே ஏற்கும்

தமிழ் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இரு வாரங்களில் தங்கள் விசாரணையை முடித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் சுதாகர், "உயிரிழந்த அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு சிறுமி உள்ளார். அச்சிறுமி இப்போது அனாதை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமியின் கல்விக்கான செலவை அரசே ஏற்கும்.

விளக்கம் அளிக்க உத்தரவு

விளக்கம் அளிக்க உத்தரவு

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவர் தொடங்கி அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளோம். இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.. இது மனிதக் குலத்தின் மீது ஏற்பட்டுள்ள பெரிய கறை. இந்தச் சம்பவம் குறித்து நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் மீது தாக்கு

காங்கிரஸ் மீது தாக்கு

இந்த சம்பவம் ஒட்டுமொத்த பொதுச் சுகாதார அமைப்பிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. காங்கிரஸ் தலைவர்கள் இதை அரசியலாக்க முயல்கின்றனர். சித்தராமையா இதைக் கூட அரசியலாக்க முயல்கிறார். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட ஒருவரை மனிதராகக் கூட நினைக்க முடியாது" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+