Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பன்.. நிறத்தை வைத்து குமாரசாமியை விமர்சித்த அமைச்சர் ஜமீர் அகமது கான்! சர்ச்சையால் மன்னிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான எச்டி குமாரசாமியின் நிறத்தை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். இவரது அமைச்சரவையில் பெங்களூர் சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் இடம்பெற்றுள்ளார்.

kumaraswamy zameer ahmed khan karnataka

ஜமீர் அகமது கான் அமைச்சராக வீட்டு வசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகளை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் ஜமீர் அகமது கான் 2 நாட்களுக்கு முன்பு பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இந்த தொகுதி எம்எல்ஏவாக கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான குமாரசாமி இருந்தார். இவர் பாஜக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் மண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மத்திய அமைச்சராகி உள்ளார். இதனால் சென்னப்பட்டணா தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பாஜக கூட்டணி வேட்பாளராக ஜேடிஎஸ் கட்சி சார்பில் களமிறங்கி உள்ளார். இதனால் பாஜகவில் சீட் கேட்டு வந்த சிபி யோகேஷ்வர் அதிருப்தியடைந்து காங்கிரஸில் இணைந்தார். மேலும் சிபி யோகேஷ்வருக்கு காங்கிரஸ் சீட்டும் வழங்கியது. சிபி யோகேஷ்வரை ஆதரித்து 2 நாட்களுக்கு முன்பு ஜமீர் அகமது கான் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், ‛‛காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் இதற்கு முன்பு வேறு வழியின்றி பாஜவில் சேர்ந்தார். காங்கிரசில் இதற்கு முன்பு இருந்த போது கருத்து வேறுபாட்டால் சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால் அவர் மஜதவில் இணைய தயாராக இருந்ததில்லை. பாஜவை விட ‛கருப்பன்' குமாரசாமி மிகவும் மோசமானவன். அதனால் மீண்டும் காங்கிரசுக்கே அவர் வந்துவிட்டார்'' என்று கூறினார்.

இதில் குமாரசாமியை ‛கருப்பன்' என்று அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது சர்ச்சையானது. இதையடுத்து ஜமீர் அகமது கானுக்கு எதிராக ஜேடிஎஸ் கட்சியினர் கடும் விமர்சனத்தை தொடங்கினர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். நிறத்தை வைத்து விமர்சனம் செய்த ஜமீர் அகமது கானிடம் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஜமீர் அகமது கான் வேறு வழியின்றி மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக மைசூரில் அவர் அளித்த பேட்டியில், ‛‛நானும், குமாரசாமியும் முன்னாள் நண்பர்கள். நான் ஜேடிஎஸ் கட்சியில் இருந்தவன். அப்போது ஒரு நாளில் 14 மணி நேரம் குமாரசாமியுடன் இருந்துள்ளேன். அவர் என்னை 'குள்ளன்' என்று கிண்டலாக கூறுவார். நானும் அவரை, 'கருப்பர்' என்று கூறி இருக்கிறேன்.

அப்படித்தான் இப்போதும் வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். இது எதார்த்தமானது தான். ஆனாலும் என் வார்த்தை ஜேடிஎஸ் கட்சியினரை காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த வார்த்தை சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேவகவுடா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு'' என்றார்.

தற்போது குமாரசாமியை விமர்சனம் செய்து மன்னிப்பு கேட்டுள்ள ஜமீர் அகமது கான் ஒரு காலத்தில் ஜேடிஎஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவர் முதல் முதலில் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து தான் 2004ல் சாம்ராஜ்பேட்டை தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் ஜேடிஎஸ் கட்சி சார்பில் மீண்டும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2018 ல் ஜமீர் அகமது கான் காங்கிரஸில் இணைந்தார். 2018 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்ற ஜமீர் அகமது கான் 2023 தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+