'கடத்திய' எடியூரப்பா உதவியாளர்.. போனில் 'கதறிய' சுயேச்சை எம்எல்ஏ.. ஏர்போர்ட்டுக்கு ஓடிய அமைச்சர்
பெங்களூர்: கர்நாடக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த, சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ், எடியூரப்பாவின் உதவியாளரால் கடத்தி செல்லப்பட்டதாக திடுக்கிட வைக்கும், குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அம்மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார்.
கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சரானவர் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ். ஆனால், திடீரென இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ராஜ்பவனுக்கு சென்று ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.

மேலும் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மற்றொரு கடிதத்தையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்தார். இதன் பிறகு பெங்களூரில் உள்ள ஹெச்ஏஎல் என்ற பகுதியில் உள்ள ஏர்போர்ட்டில் இருந்து தனியார் விமானத்தின் மூலம் மும்பைக்கு பறந்தார்.
அப்போது எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் அவருடன் இருந்தது, புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி கே சிவகுமார், தன்னை எடியூரப்பாவின் உதவியாளர் கடத்திச் செல்வதாக நாகேஷ் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை அறிந்ததும் நான் பதறி அடித்து ஏர்போர்ட்டுக்கு ஓடினேன். ஆனால், அதற்குள்ளாக விமானம் கிளம்பி விட்டது என்று தெரிவித்தார்.
பார்ப்பதற்கு இது பகீர் குற்றச்சாட்டு போல இருந்தாலும், நாகேஷ் நடவடிக்கையை வைத்து பார்ப்போருக்கு அவர் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகத் தெரியும். ஆளுநர் மாளிகைக்கு அவராகத்தான் சென்று ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டுச் சென்றார். ஆனால், அவரை கேலி செய்யும் விதமாக சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜக தான் இந்த ஆபரேஷன் தாமரையின் பின்னால் இருக்கும் கட்சி என்பதை வெளிக்காட்டுவதற்காக, கிண்டலாக சிவகுமார் இவ்வாறு கூறியதாக தெரிகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications