3,000 பிரஜ்வல் வீடியோ பிரளயம்- ஓட்டுநர் கார்த்திக்கும் எஸ்கேப்? மலேசியாவில் பதுங்கல்? பரபர கர்நாடகா!
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில், பிரஜ்வலின் ஓட்டுநர் கார்த்திக்கை காணவில்லை; மலேசியாவில் பதுங்கி இருப்பதாக பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள்தான் கர்நாடகாவில் கொதிக்கும் வெயிலை விட ஹாட் டாஃப்பிக்காக இருந்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பிரஜ்வல் ரேவண்ணா தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார். பிரஜ்வலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு சென்றே பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்ஐடி அதிகாரிகள் கைது செய்வார்களா? அல்லது நாடு திரும்பிய உடனே கைது செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களை பென் டிரைவ் மூலம் எடுத்து வைத்த ஓட்டுநர் கார்த்திக் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பாஜகவின் தேவராஜ் கவுடாவிடம்தான் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்வை கொடுத்ததாகவும் தாம் ஒருபோதும் வீடியோக்களை லீக் செய்யவில்லை எனவும் கார்த்திக் கவுடா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்ஐடி அதிகாரிகளோ, கார்த்திக் கவுடா எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என்கின்றனர்.
இதனிடையே பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ஓட்டுநர் கார்த்திக் எங்கே இருக்கிறார் என்பது முதலில் தெரிய வேண்டும். அவரை யார் எங்கே ஒளித்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வேண்டும். கார்த்தி கவுடாவை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், அவரது சகோதரர் டிகே சுரேஷ் ஆகியோர்தான் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டனர் எனவும் குமாரசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், என்னுடைய தம்பிக்குதான் எல்லாம் தெரியும் என்கிறாரே குமாரசாமி.. மத்திய அரசிடம் இருந்து அவர் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாமே.. இந்த ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்தது யார் என மத்திய அரசுதான் சொல்லிவிடுமே? இப்படி எல்லாம் சண்டை போட நான் என்ன பைத்தியமா? குமாரசாமிக்குதான் இப்படி எல்லாம் சண்டை போட தெரியும். கார்த்திக் கவுடா தம்மிடம் இருந்த ஆபாச வீடியோ பென் டிரைவ்வை பாஜகவின் தேவராஜிடம்தான் கொடுத்தார். இந்த வீடியோக்களைப் பற்றி குமாரசாமியிடமும் சொல்லி இருக்கிறார் தேவராஜ் கவுடா. ஆனால் தற்போது திசை திருப்ப பார்க்கிறார்கள் என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications