Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராத்திரி நேரம்.. நடுரோட்டில் எரிந்த தீபங்கள்.. குழம்பிய அதிகாரிகள்..குட்டுவைத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா ரோட்டில் விழுந்த பள்ளத்தை சரிசெய்யக்கோரி பெங்களூர் மற்றும் மைசூரில் குண்டும், குழியுமான ரோடுகளில் பொதுமக்கள் விளக்கு ஏற்றியும், பட்டாசு வெடித்தும் நூதன முறையில் தீபாவளி கொண்டாடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கர்நாடகா.. இந்தியாவில் பல முன்னணி ஐடி(தகவல் தொழில்நுட்பம்) மற்றும் பிடி (உயிரி தொழில்நுட்பம்) நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக உள்ளது.

இங்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இல்லாவிட்டால் இந்த இருகட்சிகளில் ஒன்று மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்த ஆட்சியை பிடிப்பது தான் சமீப காலமாக நடந்து வருகிறது.

 ரோடு பிரச்சனை

ரோடு பிரச்சனை

இதில் எந்த கட்சியினர் ஆட்சிக்கு வந்து முதல்வர் பதவியேற்றாலும் கூட அவர்களுக்கு முன் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று சாலை வசதியாகும். கர்நாடகாவை பொறுத்தமட்டில் இன்னும் கூட பல கிராமங்களுக்கு தார்சாலை அல்லது சிமெண்ட் சாலை வசதிகள் கிடைக்கவில்லை. வெறும் மண் ரோடுகளில் கிராம மக்கள் நடமாடும் நிலை தான் வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் உள்ளது.

 பள்ளமான ரோடுகள்

பள்ளமான ரோடுகள்

இது ஒருபுறம் இருக்க பெங்களூர், மைசூர், பல்லாரி, பெலகாவி, உப்பள்ளி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் தலைநகர் பகுதிகளில் தார் ரோடுகள் இருந்தாலும் கூட சில இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. குறிப்பாக மழை காலங்களில் பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல முக்கிய இடங்களில் உள்ள சாலைகள் பல்லாங்குழிகளாக மாறுகின்றன. இத்தகைய பள்ளத்தால் கார், ஜீப், பஸ், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமப்படும் வேளையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. பெங்களூரில் டூவீலர்களில் செல்பவர்களில் பலர் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கி காயமடைவது, உயிரை இழப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

வித்தியாசமான தீபாவளி

வித்தியாசமான தீபாவளி

இவ்வாறு சாலைகள் மோசமாக இருப்பதை சரிசெய்ய வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றனர். இருப்பினும் கூட அதிகாரிகளின் பாராமுகத்தால் ரோடுகள் பள்ளமாக காட்சியளித்து வருவதோடு, மக்களின் உயிரை பறிக்கும் எமனாக மாறவும் தயாரா உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவின் பல இடங்களில் பொதுமக்கள் நூதன முறையில் அதாவது ரோடு பள்ளங்கள் மீது அதிகாரிகளின் கவனத்தை திருப்பும் வகையில் தீபாவளி கொண்டாடினர்.

ரோட்டு பள்ளங்களில் தீபமேற்றி..

ரோட்டு பள்ளங்களில் தீபமேற்றி..

அதன்படி மைசூர் நகரில் ரோடு பள்ளங்களை சுற்றி ஏராளமானவர்கள் தீபம் ஏற்றினர். மண் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி தீபமெற்றி ரோட்டில் உள்ள பள்ளத்தை சுற்றி வரிசையாக அடுக்கி வைத்தனர். இது அந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதேபோல் பெங்களூர் நகரில்பன்னரக்கட்டா ரோடு, சில்க்போர்டு, பிடிஎம் 29வது மெயின் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சாலை பள்ளங்களில் வாழை மரங்கள் வைத்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் ரோடு பள்ளம் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தனர்.

கோஷமிட்ட மக்கள்

கோஷமிட்ட மக்கள்

அதோடு ரோட்டில் உள்ள பள்ளத்தை சரிசெய்து தராத துறை அதிகாரிகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். பெங்களூர், மைசூரில் நடந்த இந்த போராட்டத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பலரும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து ரோட்டில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+