நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 60 கர்நாடகா பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்- இந்துத்துவா தீவிரவாதிகள் சதி?
பெங்களூர்: இந்துத்துவா கொள்கைகளை விமர்சித்த கர்நாடகா மடாதிபதி, அமைச்சர்கள், இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் 60 பேருக்கு கடந்த ஓராண்டாக மிரட்டல் விடுத்த 'பாஸ்கர ராவ்' என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஓராண்டாக கொலை மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. மடாதிபதி நிஜகுணனநாதா சுவாமி, அமைச்சர்கள் சதிஷ் ஜர்கிகோலி, பிரியங்க் கார்கே, தினேஷ் குண்டுராவ், எழுத்தாளர்கள் தேவனூர் மகாதேவ், பர்குர் ராமச்சந்திரப்பா, எஸ்ஜி சித்தராமையா, மருலசித்தப்பா, பாஸ்கர் பிரசாத், பேராசிரியர் கேஎஸ் பகவான், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சேட்டன் என 60க்கும் மேற்பட்டோருக்கு இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.

சாஹிஷ்ணு இந்து: இந்த கடிதங்களில் ஏன் இந்துத்துவா எதிர்க்கிறீர்கள்? ஏன் பாகிஸ்தானை எதிர்க்கவில்லை? ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதில்லை? இந்துத்துவாவை எதிர்த்தால் கொலை செய்யப்படுவீர்கள்? என குறிப்பிடப்பட்டிருந்தது. சாஹிஷ்ணு இந்து என்ற பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. கர்நாடகாவில் ஏற்கனவே கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த மர்ம கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தாவணகெரே மிரட்டல் நபர்: இக்கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக பெங்களூர் சஞ்சய் நகர், பசவேஷ் நகர், கோட்டூர், சித்ரதுர்கா உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டன. இந்த கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்து கர்நாடகா போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அத்தனை கொலை மிரட்டல் கடிதங்களும் தாவணகெரே தபால் நிலையம் ஒன்றில் இருந்து மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை மிரட்டல் நபர் சிக்கினார்: தற்போது இந்த கொலை மிரட்டல் கடிதங்களை அனுப்பிய மர்ம நபர் சிக்கிவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தாவணகெரேவை சேர்ந்த பாஸ்கர ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு தனிநபரா? அல்லது அவருக்குப் பின்னால் "இந்துத்துவா' தீவிரவாத இயக்கங்கள் உள்ளனவா? ஏற்கனவே கவுரி லங்கேஷ் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டதில் இந்த நபருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications