கர்நாடகாவில் தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம்! செமயாக சிக்கிய போலீஸ்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தமிழக பதிவெண் கொண்ட லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் அங்குள்ள போலீசார் லஞ்சம் வாங்கியுள்ளனர். அப்போது இந்த மொத்த காட்சிகளையும் அங்குள்ள சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதை அறிந்தததும் போலீசார் செய்த காரியம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், கர்நாடக போலீஸ்க்கு இது நல்ல பாடமாக இருந்து இருக்கும் என பதிவிட்டு வருகிறார்கள். அப்படி என்னதான் நடைபெற்றது? என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் இருந்து சரக்குகள், பொருட்களை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் அண்டை மாநிலங்களான, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் போது டிரைவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாக அவ்வப்போது கூறி வருகிறார்கள். தமிழக பார்டரை தாண்டிவிட்டால், தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை குறிவைத்து பணம் பறிப்பதாகவும் லாரி டிரைவர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம்
குறிப்பாக சாலையோரம் லாரிகளை நிறுத்தும்போது டீசல் திருடப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றியதாக கூறி ஆர்டிஓ அதிகாரிகளும் விதி மீறல்கள் இருப்பதாக கூறி அபராதம் என்ற பெயரில் சில நேரங்களில் லஞ்சமாக பணம் பறித்துவிடுவதாகவும் லாரி டிரைவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.. இந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட லாரி டிரைவரிடம் அரசு வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆக பரவி வருகிறது.
தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்றை தமிழக லாரி டிரைவர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். கர்நாடகாவில் லாரி சென்ற போது, அங்கு வந்த போலீஸ்காரர்களுடன் ஜீப்பில் வந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ 100 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை தூரத்தில் இருந்து கவனித்த சமூக ஆர்வலர் ஒருவர், இப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று எண்ணி, அதிகாரி லஞ்சம் தான் வாங்குகிறார் என்பதை நோட்டமிட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
100 ரூபாயை கொடுத்துவிடுங்கள்
இதையடுத்து நேராக அந்த அதிகாரியிடமே வந்து ஏன் லஞ்சம் வாங்குகிறீர்கள். எவ்வளவு லஞ்சம் வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்க.. தமிழக லாரி டிரைவரிடம், பயப்படாதீங்க.. எவ்வளவு லஞ்சம் கேட்டாங்க என்று சொல்லுங்க என கேட்டார். அதற்கு தமிழக லாரி டிரைவர் ரூ.100 லஞ்சம் வாங்கினார்கள் என்று சொல்கிறார். இதைக்கெட்டதும், பணத்தை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினார்.
ஆனால் அவர்கள் கண்டும் காணாதது போல காரில் இருந்தனர். சமூக ஆர்வலரோ வீடியோ எடுத்துவிட்டோம், மரியாதையாக காசை திருப்பி கொடுத்துவிடுங்கள். லாரி டிரைவரிடம் வாங்கிய 100 ரூபாயை கொடுத்துவிடுங்கள் என்று கூறுகிறார். மேலும் அதிகாரிகளை பார்த்து காரி துப்பியபடி இழிவாக பேசினார். இதையடுத்து அவர்கள் 100 ரூபாயை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தமிழக பார்டரை தாண்டினாலே இப்படித்தான்
இதற்கிடையே லாரி டிரைவரிடம் ஆர்டிஓ அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய இந்த வீடியோவை சமூக ஆர்வலர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த பதிவுக்கு காரசாரமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சில நெட்டிசன்கள் கூறுகையில், "தமிழக பார்டரை தாண்டினாலே போதும்.. வெளி மாநில லாரிகள் என்பதால், கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி வசூல் செய்யும் சம்பவங்களை வழி நெடுக காண முடியும்" என பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "தூங்காமல் கண்விழித்து கஷ்டப்பட்டு லாரி ஓட்டும் டிரைவர்கள், இப்படியான சம்பவங்களைத்தான் தினம் தினம் சாலைகளில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. போலீசாரின் இத்தகைய செயல்களுக்கு கடிவாளம் போடும் வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications