பிரஜ்வல் கேஸ்- தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியை கூட்டணியை விட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் பாஜக?
பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3,000 ஆபாச வீடியோக்கள் எடுத்த ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜேடிஎஸ் கட்சியை கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற்றக் கூடும் என கூறப்படுகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் 3,000 ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார் என்பது தொடர்பாக பாஜக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் நீடிக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஓட்டுநர் கார்த்திக் கவுடா, தாம் பிரஜ்வல் ரேவண்ணாவின் 2976 வீடியோக்களுடன் கூடிய பென் டிரைவ்வை பாஜகவின் தேவராஜ் கவுடாவிடம் ஒப்படைத்தேன் என்கிறார். இதை தேவராஜ் கவுடாவும் மறுக்கவில்லை. ஆனால் தாம் பொதுவெளியில் இருந்த வீடியோக்களை வெளியிடவே இல்லை என்கிறார் தேவராஜ் கவுடா. காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார் கார்த்திக் கவுடா; காங்கிரஸ் கட்சியினரே இந்த வீடியோக்களை வெளியிட்டனர் என்கிறார் தேவராஜ் கவுடா. முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால் துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் இதனை திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா விசா இல்லாமல், தூதரக பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிய விவகாரத்திலும் மத்திய பாஜக அரசு மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டுகிறது. இதனை மத்திய அரசும் மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா வென்றாலும் எம்பி பதவியை பறிப்போம் என்கிறார் கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் அசோகா (அசோக்). அதேநேரத்தில் ஜேடிஎஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறதா? என்கிற கேள்விக்கு அசோக் நேரடியாக பதில் தரவில்லை. இது தொடர்பாக அசோக் கூறுகையில், ஜேடிஎஸ் கட்சியுடனான கூட்டணியை முடிவு செய்தது கர்நாடகா பாஜக இல்லை; தேசிய அளவில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டது. இதனால் ஜேடிஎஸ் கட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது குறித்து கட்சி மேலிடமே முடிவெடுக்கும் என்கிறார்.
ஏற்கனவே ஜேடிஎஸ் கட்சியில் இருந்து 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு காங்கிரஸுக்கு தாவப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூட்டணியில் இருந்தே ஜேடிஎஸ் கட்சியை பாஜக வெளியேற்றும் என்கிற தகவல் கர்நாடகா அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications