கர்நாடகா: ராஜ்யசபா தேர்தல் களேபரம்- பாஜக வேட்பாளராக இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி?
பெங்களூர்: கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களாக இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமாரின் மனைவி தேஜஸ்வி ஆகியோர் நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் கர்நாடகா மாநிலத்தில் 4 ராஜ்யசபா இடங்களும் அடங்கும்.
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அணிக்கு 2 ராஜ்யசபா இடங்கள் உறுதியாக கிடைக்கும். அதேநேரத்தில் ஜேடிஎஸ் கட்சியின் தேவகவுடா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார். இதனால் என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும் இருகட்சிகளும் பரஸ்பரம் புரிதலுக்கு வரவாய்ப்புள்ளது.

ஜேடிஎஸ்-க்கு ஒரு சீட்
ஜேடிஎஸ் கட்சியைப் பொறுத்தவரையில் அக்கட்சியின் மூத்த தலைவரான முத்தஹனுமே கவுடாவை ராஜ்யசபா எம்.பி.யாக்க விரும்புகிறது. இவர் லோக்சபா தேர்தலில் தமது தும்கூரு தொகுதியை தேவகவுடாவுக்காக விட்டுக் கொடுத்தவர். இதனால் முத்தஹனுமே கவுடாவை வெற்றி பெற வைப்பதில் காங்கிரஸின் டிகே சிவகுமாரும் முனைப்பாக இருப்பார். இதற்கு பிரதிபலனாக கர்நாடகா மேல்சபை தேர்தலில் ஜேடிஎஸ் ஆதரவை காங்கிரஸ் எதிர்பார்க்கும்.

காங்கிரஸ் ரேஸ்
மற்றொரு எம்பி இடத்துக்கு காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட பெருந்தலைகளின் பெயர்கள் உருளுகின்றன. இதில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹரிபிரஷாத், ராஜீவ் கவுடா, வீரப்ப மொய்லி, முனியப்பா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. டெல்லி செல்வாக்கு கொண்டவர் என்பதால் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

தேஜஸ்வினி அனந்தகுமார்
பாஜகவைப் பொறுத்தவரையில் 2 எம்.பிக்கள் தேர்வாக வாய்ப்பிருக்கிறது. இதில் கர்நாடகாவில் பாஜகவை வளர்த்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றன ஒருதரப்பு. ஏனெனில் லோக்சபா தேர்தலில் அனந்தகுமார் 5 முறை வென்ற பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வினிக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் இம்முறை தேஜஸ்வினிக்கு சான்ஸ் அதிகம் என கூறப்படுகிறது.

ராஜ்யசபா எம்.பி.யாக சுதா மூர்த்தி?
இன்னொரு ராஜ்யசபா இடத்துக்கு இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் தலைவரான சுதா மூர்த்தியின் பெயர் அடிபடுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தியிடம் இது தொடர்பாக பாஜக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாஜகவில் ஹூக்கேரி உமேஷ் கத்தா, தமது சகோதரர் ரமேஷ் கத்தாவுக்கு ராஜ்யசபா சீட் கேட்டு கொடிபிடிக்கிறார். இந்த கத்தா சகோதரர்கள், முதல்வர் எடியூரப்பாவுக்கு மிக நெருக்கமானவர்கள். இதனால் பாஜகவில் யாருக்குதான் சீட் கிடைக்கும் என்பதில் நிச்சயமற்ற நிலைமை நீடிக்கிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications