காவிரி: மீண்டும் நிரம்பிய கேஆர்எஸ் அணை- 53,000 கன அடி நீர் திறப்பு-90 அடியை எட்டிய மேட்டூர் அணை!
பெங்களூர்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அதிதீவிரமாக பெய்து வருவதாக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணை 2-வது முறையாக நேற்று நிரம்பியது. இந்த கேஆர்எஸ் அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது கேஆர்எஸ் அணை 2-வது முறையாக நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே உபரி நீராக திறந்துவிடப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,825 கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 90 அடியை எட்டியுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரி, அதன் துணை ஆறான கபிலாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கபிலா ஆற்றின் குறுக்கே கர்நாடகா கட்டிய கபினி அணை ஏற்கனவே நிரம்பிவிட்டது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்து வருகிறது. அணை நிரம்பியிருப்பதால் வினாடிக்கு 12,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது காவிரியில் கலந்து தமிழ்நாட்டுக்கு வருகிறது.

இதேபோல காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications