கர்நாடகா பாஜகவுக்கு கடும் ஜூரம்.. காங்கிரஸுக்கு தாவும் மாஜி முதல்வர் சதானந்த கவுடா?
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் பாஜகவின் முகங்களில் ஒருவராக இருந்தவர் சதானந்த கவுடா. பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 2006-ல் கர்நாடகா பாஜக தலைவராகவும் பதவி வகித்தார் சதானந்த கவுடா. 2011-ல் கர்நாடகா முதல்வராகவும் பதவி வகித்தவர் சதானந்த கவுடா. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அடுத்தடுத்து பல பொறுப்புகளை வகித்தார்.

ஆனால் வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சதானந்த கவுடா நீக்கப்பட்டார். இந்த நிலையில் பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்பினார் சதானந்த கவுடா. ஆனால் பாஜக மேலிடமோ அவருக்கு சீட் தர மறுத்துவிட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார் சதானந்த கவுடா.
பாஜகவில் கடும் அதிருப்தியில் இருக்கும் சதானந்த கவுடாவுடன் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் டிகே சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சதானந்த கவுடா, காங்கிரஸுக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு தாவும் சதானந்த கவுடா, பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதி அல்லது மைசூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்படக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சதானந்த கவுடா கூறுகையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது உண்மைதான். என் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்க இருக்கிறேன். லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப்பட்டவர்கள் பாஜக தலைமையுடன் பேச முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட ஈஸ்வரப்பா சுயேட்சையாக போட்டியிடுவது அவரது தனிப்பட்ட முடிவு என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாம் தேர்தல் அரசியலில் இனி பங்கேற்க போவது இல்லை; 2024 லோக்சபா தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார் சதானந்த கவுடா. அப்போது கூட பாஜகவில் இருந்து விலகுவதாகவோ அதிருப்தியில் இருப்பதாகவோ சதானந்த கவுடா தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications