ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் வரிசையில் சித்தராமையா.. பெங்களூரில் போராட்டம்- "இந்தியா" கூட்டணி ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஆளுநர் கெலாட் மூலம் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்திருப்பதைக் கண்டித்து பெங்களூரில் "இந்தியா" கூட்டணி சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மாநில முதல்வர்களையே அடுத்தடுத்து அமலாக்கத்துறை கைது செய்து வருவது இந்தியா கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

congress india bloc


இந்த வரிசையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட மூடா விவகாரத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இந்த அனுமதிக்கு எதிராக சித்தராமையாவும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.

இதனால் சித்தராமையாவின் பதவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை பாஜக-ஜேடிஎஸ் இணைந்து கவிழ்க்க முயற்சிப்பது குறித்தும் சித்தராமையா பதவி விலகுவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனையின் முடிவில், சித்தராமையா தொடர்ந்து பதவியில் நீடிப்பார்; சட்டப்படியான நடவடிக்கைகளை அவர் மேற்கொல்வார் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து சித்தராமையாவுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. இதனால் பெங்களூரில் "இந்தியா" கூட்டணியின் அனைத்து தலைவர்களும் ஒருங்கினைந்து பங்கேற்கும் போராட்டத்தை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+