நாடு முழுவதும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. சித்தராமையா தடாலடி
Recommended Video
பெங்களூர்: நாடு முழுவதிலும் பாஜக வலையில் விழும் எம்எல்ஏக்களுக்கு கர்நாடக சபாநாயகர் வலுவான ஒரு எச்சரிக்கையை பிறப்பித்துள்ளார் என்று கர்நாடக சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த, 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே ஆர் ரமேஷ் குமார் நேற்று உத்தரவிட்டார். எனவே, தகுதி நீக்கம் செய்த அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 17க்கு உயர்ந்துள்ளது.

15வது சட்டமன்றம் 2023 மே மாதம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும். அதுவரை, இந்த 17 பேரும் இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் எடுத்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வரவேற்றுள்ளார். இது பாஜகவின் வலையில் விழக்கூடிய, மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவான செய்தியை அனுப்பும்.
சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். சபாநாயகரின் இந்த நேர்மையான முடிவு பாஜகவின் வலையில் விழக்கூடிய நாட்டின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் வலுவான சமிக்ஞைகளை அனுப்பும், என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதனிடையே, தகுதிநீக்கங்களுக்குப் பிறகு அதிருப்தியாளர்கள் யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா, என்று நிருபர்கள் கேட்டபோது, சித்தராமையா கூறுகையில், "அவர்களில் இருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள், ஆனால் நான் அவர்களிடம் பேசவில்லை, நான் பழைய பிரச்சினையைப் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. " என்று சித்தராமையா தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications